This Day in History April 18; வரலாற்றில் இன்று ஏப்ரல் 18 ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறந்த தினம், Today Birthdays in History, Today Deaths in History.
1906ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிலநடுக்கத்தில் 3000பேர் வரையில் உயிர் இழந்தனர். நகரத்தில் தீ பிடித்ததில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1942ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் பொழுது ஜப்பானின் டோக்கியோ, யோக்கோகமா, கோபே, நகோயா ஆகிய நகரங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு தாக்குதலை நடத்தியது.
1983ஆம் ஆண்டு லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதகரத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.
1912ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்தோர் 705 பேர் நியூ யார்க் வந்து சேர்ந்தனர்.
1930ஆம் ஆண்டு பிபிசி தனது வழமையான செய்து அறிக்கையில் இந்நாளில் எந்த செய்தியும் இல்லை என அறிவித்தது.
Today Birthdays in History
1858- இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர் தொண்டோ கேசவ் கார்வே பிறந்த தினம் இன்று.
1883- தமிழக திரைப்பட வெளியீட்டாளர், தாயாரிப்பாளர், தொழிலதிபர் சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த தினம் இன்று.
1910- இந்தியக் கல்வியாளர், பொருளியலாளர் மால்கம் ஆதிசேசையா பிறந்த தினம் இன்று.
Today Deaths in History
1859- இந்திய ராணுவ தளபதி தாந்தியா தோபே இறந்த தினம் வரலாற்றில் இன்று.
1916- இந்திய இதழியாளர் ஜி. சுப்பிரமணிய ஐயர் இறந்த தினம் இன்று.
1955- நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறந்த தினம் வரலாற்றில் இன்று.