Home விளையாட்டு வெறித்தனமான ஆஸ்திரேலிய அணி இது 90 கிட்ஸ்

வெறித்தனமான ஆஸ்திரேலிய அணி இது 90 கிட்ஸ்

230
0

வேட்டைக்காரன் படத்தில் வில்லன் சொல்வது போல் பயம் வேதநாயகம் பயம்.

கிரிக்கெட்ல 10 வருசத்துக்கு முனனாடி 90ஸ் கிட்ஸக்கு பயம் ஆஸ்திரேலியா பயம்.

மிகப்பெரியஜாம்பவான் அணியாங கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலம் ஆஸ்திரேலியா அணி.

90 கிட்ஸ்க்கு மார்க் டெய்லர் கேப்டனா இருந்ததும் ஸ்டீவ் வாஹ் கேப்டன் என்று எல்லாம் தெரியாது.

ரிக்கி பாண்டிங் 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீங்கா எதிரி ஆனார்.

அன்றைய ஆஸ்திரேலியாவில் ஓபனிங் பேட்ஸ்மேன் என்றாலே மேத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ்ட்.

இவர்கள் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். இவர்களை விக்கெட் வீழ்த்துவதே மிகவும் கடினமான ஒன்று.

இவர்களில் எவராவது ஒருவரை விக்கெட் எடுத்தால் தான் அடுத்து வரும் ஆஸ்திரேலிய வீரரைபார்க்க முடியும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல.

இவர்களில் யாராவது விக்கெட்டுகள் விழுந்தால் அடுத்து வருபவர் ரிக்கி பாண்டிங்.

அன்றைய அசுரபலம் படைத்த ஒரு பேட்ஸ்மேன் முழு திறமையுடன் தனது விக்கெட்டை விளையாட கூடியவர்.

அதிரடி ஆட்டத்தை எளிதாக விளையாட கூடிய திறமை கொண்டவர். தப்பித்தவறி இவர்களுக்கு தவறுகள் நடந்து விக்கெட் விழுந்தால்,

அடுத்தடுத்து டேமியன் மார்ட்டின், ஆன்ட்ரூ சைமன்,ஸ், தாரன் லிமன், மைக் ஹஸ்ஸி, மைக்கல் கிளார்க் ஷேன் வாட்சன் என நடுவரிசையில் நங்கூரம் போல் விளையாட கூடியவர்கள்.

பேட்ஸ்மேன் விக்கெட்டுகள் கூட அடுத்தடுத்து மைக்கேல் பெவன், மெக்ராத், பிரட் லீ, நாதன் பிராக்கன், கில்லப்ஸி, மிட்செல் ஜான்சன் போன்ற வீரர்கள் பந்துவீச்சில் மிகப் பெரிய ஜாம்பவான்களாக இருந்தார்கள்.

இருந்தாலும் கூட இவர்கள் சில சமயங்களில் அதிரடி பேட்ஸ்மேன்களாகவும் மாறக் கூடியவர்கள்.

அந்த அணி அந்த அளவுக்கு தங்களை தயார் செய்து வைத்துக் கொண்டு இருந்தது. இவர்களை சந்திக்கும் தைரியம் தென்னாப்பிரிக்கா அணிக்கு மட்டுமே உண்டு.

கங்குலி தலைமையில் பல போட்டிகள் மோதினாலும் முக்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மட்டுமே வெற்றி பெறும்.

இருநாட்டு ஒருநாள் தொடர், முத்தரப்பு தொடர் போன்றவற்றில் ஆஸ்திரேலிய அணி லீக் போட்டியில் தோற்றாலும், இறுதிப் போட்டி என்றவுடன் அசுர பலத்துடன் விளையாட ஆரம்பித்து விடும்.

இதற்கு சான்று 1999, 2003, 2007 ஆம் ஆண்டு உலக கோப்பையை வாங்கி அசத்தியது.

இன்னும் சொல்லப்போனால் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டால் கூட இந்திய ரசிகர்கள் இந்தியா வெற்றி பெறும் என்று அதிக நம்பிக்கை வைத்து விடமாட்டார்கள் ஆஸ்திரேலியா என்பதால்.

இவர்களை வெற்றி பெறவேண்டுமென்றால் அன்றைய காலகட்டத்தில் அனைத்து நாட்டு ரசிகர்களும் தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.

அவர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க அளவிற்கு வீரர்களை வைத்திருந்தார்கள்.

சுமித் தலைமையில் கிப்ஸ், ஹேரி கிருஷ்ணன், காலிஸ், டிவில்லியர்ஸ், ஷான் பொல்லாக், நித்தினி, லான்ஸ் குளூஸ்னர், ஜான்டி ரோட்ஸ் போன்ற வீரர்கள் இருந்தார்கள்.

2008 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் விளையாடியது.

இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இதில் கலந்து கொண்டது. இந்த தொடரில் மூன்று இறுதி ஆட்டங்கள் நடைபெறுவதாக இருந்தது.

இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

முதல் இரண்டு இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது இதுவே முதல்முறை ஆஸ்திரேலியாவின் சாம்ராஜ்யத்தை உடைத்த மகேந்திர சிங் தோனி.

அந்த காலகட்டத்தில் பல ஆஸ்திரேலியா வீரர்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி நாட்களில் விளையாடிக்கொண்டிருந்தார்கள் .

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்த இன்னொரு அணியும் இருக்கின்றது. அந்த அணிதான் இங்கிலாந்து.

ஆஷஸ் தொடர் என்றாலே அனைத்து நாட்டு ரசிகர்களுக்கும் ஆர்வம் பற்றிக்கொள்ளும்.

ஆஸ்திரேலிய மண்ணில் மைக்கேல் வாகன் தலைமையில் கோப்பையை ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது. ஆஸ்திரேலியா அணி மிகவும் விமர்சனத்துக்கு உள்ளானது.

கங்குலி தலைமையில் இந்தியா ஆஸ்திரேலியாவுடன் ஒரு ஒருநாள் போட்டியில் மோதின. கடைசி பந்தில் பந்து வீச்சாளர் பிரெட் லீ சிக்சர் அடித்து இந்தியாவின் வெற்றிபெறும் கனவை தகர்த்தார்.

நமக்கே இந்த கதி என்றால் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற அணியை சொல்லவா வேண்டும்.

ஆஸ்திரேலியா சென்றாலும் சரி, ஆஸ்திரேலியா மத்த நாட்டிற்கு சென்றாலும் சரி எதிர் அணிக்கே உதை.

இது போன்ற ஜாம்பவான் ஆஸ்திரேலியா அணி தற்போது இல்லை. ஒருவருக்கொருவர் பலமான வீரராக இருந்தாலும், அணியாக வரும்போது ஒற்றுமை இல்லாதது அந்த அணியின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.

தற்போது அணையில் நீண்ட நாட்களாக விளையாட்டு வீரர் என்று சொல்லும்படி யாருமில்லை.

டெஸ்ட் போட்டிக்கு டிம் பைனே கேப்டனாகவும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கு ஆரோன் பின்ச் இருந்து வருகிறார்கள்.

ரிக்கி பாண்டிங் இரண்டு உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்திருந்தாலும், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை அரையிறுதிப் போட்டிகள் பழிதீர்த்துக் கொண்டது.

Previous articleசுத்தியை கையிலெடுத்த விஷ்ணு விஷால்: ரத்தக்கறையுடன் வெளியான பட டைட்டில்!
Next articleபாண்டியன் ஸ்டோர்ஸ் மீண்டும் ஒளிப்பரப்பலாமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here