Home விளையாட்டு தோனி தான் ஆஸ்திரேலிய அணிக்கு தேவை – ஜஸ்டின் லாங்கர் ஓபன் டால்க்

தோனி தான் ஆஸ்திரேலிய அணிக்கு தேவை – ஜஸ்டின் லாங்கர் ஓபன் டால்க்

371
0

2000ம் ஆண்டுகளில் இருந்து 2007 ஆம் ஆண்டுகள் வரை இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெறும் தருவாயில் தோல்வியை தழுவியுள்ளது.

அந்த காலகட்டத்தில் ஆட்டத்தை முடிப்பவர் அதாவது பெஸ்ட் பினிஷேர் யார் என்று கேட்டால் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன் அவர்களை மட்டுமே தான் கூறுவார்கள்.

தோனி இரண்டு உலககோப்பை

2007 ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று கொடுத்து தோனி என்ற ஒருவர் உலகத்திற்கே பிரபலமானார்.

இந்தியாவில் விக்கெட் கீப்பிங் மட்டுமில்லாமல் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி ஆட்டத்தை முடித்துக் கொடுக்க பெஸ்ட் பினிஷேராகவும் வலம் வருவார் தோனி.

2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை இறுதி போட்டியில் பினிஷராக தோனி அடித்த கடைசி சிக்ஸில் இந்திய அணி வெற்றி பெறும்.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் கேப்டன் இன்னிங்ஸ் ஆடி வேர்ல்டு பெஸ்ட் பினிஷாராக இருந்து வருகிறார்.

நடந்து முடிந்த 2019 ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு தோனி இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவருகிறார்.

ஆனால் இன்று வரை உலகின் சிறந்த பினிஷராக இருந்து வருகிறார். இடையில் ஏபி டி வில்லியர்ஸ் வந்தாலும், தோனி அடுத்து கொள்ள ஆளே இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

நடுவரிசை ராக்ஸ்

வருகிற மார்ச் 29ம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது ஐபிஎல் இவருக்கென்று உலகம் முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது இவர் இல்லாமல் இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் மற்றும் நடுவரிசையில் ரன் எடுக்காமல் சொதப்பி வருகிறார்கள். இந்திய அணி கடந்த நியூசிலாந்து அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின் லாங்கர் பேட்டி

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஐசிசி இணையதளத்திற்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :

“மைக் ஹஸ்ஸி, மைக்கேல் பவன் போன்ற முன்னாள் பினிஷர்கள் போல இன்று எங்கள் அணியில் இல்லை, இதுவே எங்களுக்கு மிகப்பெரிய துரதிர்ஷ்டம். இதனால் பல சோதனை முயற்சிகளை செய்ய வேண்டியது உள்ளது.

இந்தியாவின் தோனியை போல் எங்களுக்கும் ஒரு பிரஷர் தேவை, ஆனால் இங்கிலாந்திற்கு ஜோஸ் பட்லர் இருந்து வருகிறார். இது போன்ற சிறந்த பினிஷர்களை நாங்கள் தேடி வருகிறோம்.

குறிப்பாக தோனி பல போட்டிகளில் தோல்வி விளிம்புகளில் இருந்தபோதும் நம்பிக்கை அற்ற சூழலில் இருந்த போதிலும் தன்னுடைய சூப்பர் பினிஷிங் மூலம் போட்டியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆதலால் இது போன்ற சிறந்த பினிஷர்களை எங்கள் அணிக்கு தேடிக்கொண்டிருக்கிறோம். அடுத்த நடக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் சிறந்த பினிஷர்களைத் தேடி பல சோதனைகள் செயல்படுத்த உள்ளோம்.

இப்போது இருக்கும் அணியில் யாருக்கும் நிரந்தர இடம் என்பது இல்லை, அதனால் வரக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் அந்த இடத்தை நிரப்புவார்கள்,” இவ்வாறு ஜஸ்டின் லாங்கர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here