உடலுறவு வைத்துக்கொள்வதன் மூலம் கொரோனா பரவுமா? செக்ஸ் வைத்துக்கொள்வதால் கொரோனா பரவ வாய்ப்பு இருக்கலாம் என சமீபத்திய ஆய்வு தெரிகிறது.
மனித விந்தணுக்களில் கொரோனா இருக்க வாய்ப்பு இருப்பதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனாலும், எத்தனை நாட்களுக்கு அல்லது எவ்வளவு நேரத்திற்கு விந்தணுக்களில் கொரோனா வைரஸ் இருக்கும் என்று தெரியவில்லை.
மேலும், உடலுறவு மூலம் கொரோனா வைரஸ் பரவுமா என்பது குறித்தும் தெரியவில்லை. கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்விலும் இது நிரூபிக்கப்படவில்லை.
பொதுவாக இருமல் தும்மலின் போது வெளிவரும் நீரின் மூலமே பரவும். முடிந்த வரை உடலுறவு கொள்வதை தவிர்க்கவும்.
ஜிக்கா, எபோலா உள்ளிட்ட வைரஸ்கள் உடலுறவு மூலமும் பரவும் தன்மை கொண்டவை என்பதை அடிப்படையாக வைத்தே கொரோனாவுக்காகவும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.