Home சிறப்பு கட்டுரை கொரோனா போன்ற கிருமிகளை நம் முன்னோர்கள் எப்படி ஓட ஓட விரட்டினர்

கொரோனா போன்ற கிருமிகளை நம் முன்னோர்கள் எப்படி ஓட ஓட விரட்டினர்

21
4127
நம் முன்னோர்கள்

கொரோனா போன்ற கிருமிகளை நம் முன்னோர்கள் எப்படி ஓட ஓட விரட்டினர். முன்னோர்கள் வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து எப்படி பாதுகாத்துக்கொண்டனர் என இப்பதிவில் பார்க்கலாம்.

பழமையை மறந்தோம்

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் இல்லை. இன்றைய சூழ்நிலையில் எதையெல்லாம் மூடநம்பிக்கை என்று தொலைத்திருக்கிறோமோ அதையெல்லாம் மறுபடியும் தேடி அலைந்து கொண்டுடிருக்கிறோம்.

நம் முன்னோர் உண்ணும் உணவு பழக்கத்தினை மாற்றி, துரித உணவில் இலயித்து ஆரோக்கியத்தை இழந்தோம். உடற்பயிற்சியை மறந்து தொப்பையை உண்டு செய்தோம்.

வீடியோ கேம்ஸ்கள் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டோம். அவன் பின்பற்றிய உடையை மறந்து கலாச்சார சீரழிவில் சிக்கிக்கொண்டு தவிக்கிறோம்.

தற்பொழுது ஆர்கானிக் உணவு என்றால் அதிக விலைகொடுத்து வாங்க வேண்டி உள்ளது. காரணம் ஒரு நேரத்தில் விவசாயிகள்  மற்றும் விவசாயத்தை மதிக்காமல் வயிற்றில் அடித்தது.

அதே போன்றே முன்னோர்கள் நடைமுறையைப் பின்பற்றாமல் டெங்கு, கொரோனா போன்றவற்றால் பாதிக்கப்படுகிறோம்.

இந்த பதிவு வரும்முன் எப்படி காப்பது என்று மட்டுமே. வந்த பின் எப்படி போக்குவது என்பது அல்ல.

கொரோனா வருவதற்க்கு முன்பே நம் முன்னோர் கற்றுக்கொடுத்த பாடங்கள் பல. அவற்றுள் சிலவற்றை இங்குகாணலாம்.

வெளியில் சென்றுவந்தால் கை, கால்களை, கழுவி  விட்டு உணவருந்துதல், பச்சைக் காய்கறிகளை,  உணவில் அதிகம் சேர்த்தல், பழவகைகளையும், சிறுதானியங்களையும் சிற்றுண்டியாக எடுத்துக்கொண்டது.

மாமிச வகை உணவுகளை தவிர்த்தல், இதில் கடைசியாக உள்ள காரணிதான் வைரசின் முக்கிய இடம். (பறவை, விலங்குகளிலிருந்து  இதுபோன்ற வைரஸ் தொற்றுகள் இதற்கு முன் அதிகம் பரவியுள்ளது)

வீட்டில் துணிகளை போடுவதற்கு என்ற இடம் அமைத்தது. வெளியிலிருந்து வருவோர் அந்த அறையைப் பயன்படுத்தி தங்களை சுத்தப்படுத்தி விட்டு வீட்டினுள் சென்றனர்.

வீட்டில் முற்றம் அமைத்து வீட்டிற்குள் நுழைந்த உடன் அங்கு சென்று சுத்தம் செய்து கொண்ட பின்பே வீட்டின் மற்ற அறைகளில் நுழைவார்கள்.

தற்பொழுது அடுக்குமாடி குடியிருப்பில் (New Apartment House) குடியிருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.

பெண்களை அந்த நாட்களில் தனியாக இருக்க வைத்தது அவர்களுக்கு உடல் ஆரோக்கிய உணவு பதார்த்தங்களை, தனி தலையணை (bed sheet and pillow) செய்து கொடுத்தது.

இதுபோன்ற காரணங்களினாலும், உடற்பயிற்ச்சி, நடைபயிற்சி கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்ததாலும் அவர்கள் ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்தனர்.

கொரோனா உயிர்பலி அதிகம் உள்ள நாடுகள்

கொரோனாவினால் அதிக உயிர்கள் பலியானது. சீனாவில், இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் ஈரானும், நான்காம் இடத்தில் தென்கொரியாவும் உள்ளன.

இதைத் தொடர்ந்து பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய நாடுகளில் கொரோனா பரவிக்கொண்டிருக்கிறது.

சாம்பிராணி புகையினால் காற்றில் பரவும் கிருமிகள்  அழிந்துவிடுகின்றன. நெய்யிலும், சில எண்ணெயில் இருக்கும் சக்தி விஷகிருமிகள் பரவுவதை தடுக்கும்.

அதனால் தான், ஆலயத்தில் தீபமேற்றும் பழக்கம் உண்டாயிற்று. கோவில்களில் தரும் சில தீர்த்தங்களிலும் மருத்துவகுணம் உண்டு.

தர்ப்பைப்புல் என்கிற தாவரத்திலும் நோய்கிருமி பரவாது. வேப்பிலை, துளசி போன்ற இலைகளிலும் நோய் தடுப்பு சக்தி உண்டு.

இதையெல்லாம் மூடநம்பிக்கை எனத் தள்ளி வைத்ததன் விளைவு? கொரோனா, டெங்கு போன்ற வைரஸ்கள் நம்மை தாக்குகிறது. இதை வரும் முன் காக்கும் முறை நம்முன்னோர் பின்பற்றிய வாழ்க்கை முறை.

பொதுவாக சாம்பிராணி, தூபம் போடப்படும் வீடுகளில் தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்புகளில்லை. இது கடவுளிடம் விசுவாசம் கட்டுவதற்கு மட்டும் அல்ல. இதுபோன்ற நல்ல பாசிடிவ் வைபரேசன்கள் நம்மை சுற்றி இருக்க வேண்டும் என்பதற்கு தான்.

அதேபோல் நாம் குடிக்கும் நீர் சீரகம் சேர்க்கப்பட்டநீராக இருப்பதும், எந்த நீராக இருந்தாலும் கொதிக்க வைத்து குடிக்கும் பழக்கத்தைப் பின்பற்றினால் கொரோனா பாதிப்பிலிருந்தும் தப்பிக்கலாம்.

குறிப்பு:- இவை எல்லாம் கிருமிகள் வருவதற்கு முன் தற்காத்து கொள்ளும் பழங்கால வழக்கம். கிருமி நம்மை தாக்கிய பின் குணப்படுத்தும் மருந்துகள் அல்ல. இதை தெளிவாக புரிந்துகொண்ட பின்பற்றுங்கள்.

21 COMMENTS

  1. நாகரீகம் என்னும் பெயரில் நாம் தொலைத்த , தொலைந்த விஷயங்கள் .அருமையான பதிவு வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here