கலை மற்றும் அறிவியல் கல்லூரி இனிமேல் – தமிழக அரசு அதிரடி
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையிலிருந்து வரும் இரு சுழற்சி முறைகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இரு விதமான பட வேளைகள்:
தமிழக்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் என்று இரு விதமான பட வேளைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன .
காலை வேளை வகுப்பு காலை 7. 30 மணிக்கும் மதிய வேளை மதியம் 12 . 30 மணிக்கும் தொடங்குகின்றன .
இந்நிலையில் காலை வெகு சீக்கிரம் கல்லூரி தொடங்குவதால் கல்லூரி மாணவர்கள் சரியான நேரத்தில் உணவருந்த முடியாமல் போவதாக தெரிகிறது .
உடல் நலம் பாதிப்பு:
இதன் காரணமாக மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு இரத்த சோகை போன்ற பலவித நோய் தாக்குதலுக்கு ஆளாவதாக தெரியவந்ததை அடுத்து தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது .
கல்லூரி இயக்ககம் அறிவிக்கை:
எனவே தான் நடைமுறைலிருக்கும் இரு பாட வேளைகள் ரத்து செய்யப்பட்டு ஏற்கனவே 2006 ஆண்டுக்கு முன்பிருந்த ஒரே பாடவேளை அமல்படுத்தப்படுகிறது , என கல்லூரி இயக்ககம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது .
மேலும் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்காக அரசிடம் கூடுதல் நிதி கோரப்படும் எனவும் தெரிவித்துள்ளது .
ஊரடங்கு முடிந்த பிறகு இத்தகைய நடைமுறை அமலுக்கு வருகிறது.