சென்னையில் இளம் பெண் பலி – கொரோன காரணமா ?
காய்ச்சல் காரணமாக சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 20 வயதான இளம் பெண் மரணம் அடைந்துள்ளார் , இதனால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
வீட்டு சிறை:
உலகமே கொரோன வைரஸ் காரணமாக வீட்டு சிறையில் அடைபட்டுள்ளது , மேற்கத்திய நாடுகள் கடுமையான உயிரிழப்பை சந்தித்து வருகின்றன .
இந்தியாவில் தொடக்கத்தில் சில ஆயிரங்களில் இருந்த நோய் தோற்று தற்பொழுது ஒரு லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ,பலி எண்ணிக்கை 3000 கடந்து சென்று கொண்டிருக்கிறது .
சென்னை போராட்டம்:
குறிப்பாக தமிழக்தில் சென்னை மிகவும் கவலைக்குரிய நிலையில் கொரோனவை எதிர்த்து போராடி வருகிறது .
ஆரம்பத்தில் மிக குறைவாக இருந்த எண்ணிக்கை சமீப நாட்களில் 500 க்கு குறைவதில்லை என்பதை வைத்து சென்னையின் நிலைமையை அறியலாம்.
குறிப்பாக நேற்று ஒரே நாளில் சென்னையில் 510 கொரோன தொற்று கண்டறியப்பட்டுள்ளது .
இளம் பெண் பலி:
இந்நிலையில்தான் இன்று ராயபுரம் அரசு மருத்துவ மனையில் கொரோன நோய் தொற்று பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் திடீரென்று உயிரிழந்துள்ளார் .
அப்பெண் ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் என்றும் அவருக்கு ஒரு வாரமாக காய்ச்சலும் ,கடுமையான சளியும் இருந்துள்ளது .
சோதனை முடிவுகள்:
இதன் காரணமாக நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் இறந்துள்ளார்.
இருப்பினும் குறித்த பெண் கொரோன வைரஸ் காரணமாக பலி ஆகியிருக்க கூடும் என்பது சோதனை முடிவுகள் வந்தே பிறகே தெரியவரும்.