முன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி – திடீர் நெஞ்சுவலி?
மன்மோகன் சிங் தற்போதைய உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது
முன்னாள் பிரதமர்:
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமராக பதவி வகித்தவர் பொருளாதார அறிஞர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கவும் பதவி வகித்துள்ளார் .
எய்ம்ஸில் அனுமதி:
நேற்று இரவு சுமார் 8 45 மணியளவில் திடீர் நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம்:
இன்று காலை மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இதய பிரிவு சிறப்பு மருத்துவர் நிதிஷ் நாயக் அறிக்கை வெளியிட்டுள்ளார் .
அந்த அறிக்கையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வில்லை எனவும் சாதாரண பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் .
மன்மோகன் சிங் உடல்நிலை:
மேலும் அவர் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும் இருப்பினும் தொடர் கண்காணிப்பு தேவைப்படுவதால் , அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங்கிற்கு கடந்த 2009 ஆண்டு இதய அறுவை சிகிச்சை மற்றும் 2008 கண்புரை சிகிச்சையும் நடை பெற்றது நினைவு கூறத்தக்கது.
87 வயதாகும் மன்மோகன் சிங் தற்போது ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார் .
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான மன்மோகன் சிங்கின் உடல்நிலை தேற பல்வேறு பிரமுகர்கள் பிராத்தனை மேற்கொண்டுள்ளனர்