கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை கொன்றுள்ளது.
கொரோனா வைரஸ் தடுக்க பல நாடுகள் முன்னெச்சரிக்கை எடுத்து வரும் நிலையில் பல நாடுகள் வெளிநாட்டு விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
கொரோனாவை கட்டுபடுத்த மற்ற நாட்டிலிருக்கும் தன் சொந்த மக்களை அழைத்து வர பல நாடுகள் தயங்கும் அஞ்சவும் செய்கிறது.
இந்த நிலையில்தான் கியூபா அரசு மனிதநேயத்துடன் ஒரு நல்ல காரியத்துக்கு உதவிசெய்து உலகளவில் பாராட்டை பெற்று வருகிறது.
600 சுற்றுலா பயணிகளுடன் எம்எஸ் பிரீமர் என்ற பிரிட்டனைச் சேர்ந்த கப்பல் கரீபியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது.
பயணிகள் பெரும்பாலானோர் பிரிட்டனை சேர்ந்தவர் ஆவார்கள். அவர்களுக்கு அந்த கப்பலில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலை ஏதாவது ஒரு துறைமுகத்திற்கு நிறுத்த பல கரீபியன் தீவுகளிடம் உதவி கேட்டது. ஆனால் எந்த அரசும் இந்த கப்பலுக்கு உதவ முன்வரவில்லை.
ஆகவே பிரிட்டன் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அமெரிக்கா மற்றும் கியூபா அரசுகளிடம் கப்பலை நிறுத்த அனுமதிக்குமாறு உதவி கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால் அமெரிக்காவோ அதற்கு தடை விதித்தது. கியூபா அரசு மனிதம் போற்றி உதவ முன்வந்தது.
அவர்கள் கேட்டுக் கொண்டதை கியூபா அரசும் ஏற்று அந்த கப்பலை எங்கள் தேசத்தில் நிறுத்துமாறு அனுமதித்தது.
கியூபாவில் தற்போது வரை 5 நபர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த கப்பலின் மூலம் அதிக மக்களுக்கு கொரோனா வந்து விடுமோ என்று அஞ்சாமல் அந்தக் கப்பலுக்கு உதவ முன்வந்ததால் உலகமே கியூபா அரசை பாராட்டி வருகிறது.
கியூபா கட்டுபாட்டில் உள்ள பஹமாஸ் என்னும் துறைமுகத்தில் இந்தப் பீரமர் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதில் உள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கொரோனா சோதனைக்கு பிறகு கியூபா நாட்டிற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அந்தக் கப்பலில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாகவும், 52 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் இண்டிபெண்டன்ஸ் செய்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
வைரஸ் பாதித்தவர்களை கியூபா வில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். மற்றவர்களை 4 விமானங்கள் மூலம் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கியூபா அரசு தெரிவித்துள்ளது.
உலகமே கொரோனா சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த கப்பலை வரவேற்று அதில் மக்களின் காப்பாற்றும் எண்ணத்துடன் செயல்பட்டது கியூபா அரசை பாராட்டியே ஆக வேண்டும்.
இதுபோன்ற செயல் கியூபாவிற்கு புதிதல்ல
கியூபா நாட்டின் சுகாதார வழங்குநர்கள் ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பாதிப்பில் கியூபா மருத்துவர்கள் செய்த உதவிகளால் பாராட்டப்பட்டனர்.