Home நிகழ்வுகள் உலகம் அடப்பாவிங்களா இருந்த ஒன்றையும் கொன்னுட்டீங்களே?

அடப்பாவிங்களா இருந்த ஒன்றையும் கொன்னுட்டீங்களே?

1164
0

உலகிலேயே மிக உயரமான விலங்கினம் ஒட்டகச்சிவிங்கி. வெள்ளைநிற ஒட்டகச்சிவிங்கி மிகவும் அரிய வகையான உயிரினம்.

உலகிலேயே மிக உயரமான விலங்கினம்

வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி (white giraffe) கென்யா நாட்டில்  2017-ஆம் ஆண்டு தான் வன அலுவலகர்களால் கண்டறியப்பட்டுது. பிறகு அந்த ஒட்டகச்சிவிங்கி இரண்டு குட்டிகளை ஈன்றெடுத்தது.

உலகிலேயே மிக அதிசயமான ஒன்றான வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கியை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் கென்யாவிற்கு படையெடுத்து வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கென்யா வனக் காப்பாளர்கள் வெள்ளை நிற ஒட்டகச் சிவிங்கியைத் தேடி வந்தனர்.

ஆனால் மிஞ்சியது இரண்டு வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கியின் எலும்புக்கூடுகள் மட்டுமே. நான்கு மாதத்திற்கு முன்பே இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leucism மரபணு மாற்றத்தால் இந்த ஒட்டகச்சிவிங்கிகள் வெள்ளை நிறத் தோலுக்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கென்யா வனவிலங்கு சரணாலயத்தின் மேலாளரான மெகமத் அகமது கூறுகையில், இன்று கென்யாவுக்கு மிகவும் சோகமான நாள், அரிய வகை விலங்குகளை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பதில் நாங்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

உலகில் உள்ள அனைத்து வனவிலங்கு பாதுகாவலருக்கு  இது ஒரு அச்சுறுத்தலாக அமையும். இந்த ஒட்டகச்சிவிங்கி இழப்பால் நாங்கள் நடத்திய மரபணு சோதனை மற்றும் ஆராய்ச்சிகளும் வீண் போய்விட்டன.

கடந்த 30 ஆண்டுகளில் 40 சதவீத ஒட்டகச் சிவிங்கிகள் வேட்டைக்காரர்கள் வேட்டையாடப்பட்டு உள்ளது. இந்த பூமியை அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ உரிமை உள்ள இடம்.

இந்த சுற்றுச்சூழல் எல்லா உயிரினங்களும் பங்கு வகிக்கிறது. இப்படி ஒவ்வொரு அரியவகை உயிரினமும் அழிவைச் சந்திப்பது மிகப் பெரிய ஆபத்தில் போய் முடிந்து விடும் என்கிறார்கள் சில சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள்.

கென்யா மற்றும் தான்சானியா பகுதி காடுகளில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவது வாடிக்கையாக உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான்சானியாவில் யானைகள் அதிகரிப்பால், 10 ஆயிரம் யானைகளை கொள்ள திட்டமிட்டனர். அதன்படி கென்ய அரசு, 1000 யானைகளை கடந்த மாதம் கொன்றது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களை. கொல்ல ஆஸ்திரேலியா அரசு முடிவு எடுத்தது குறிப்பிடத்தக்கது

Previous articleரஜினிக்காக காத்திருக்கும் அரசியல்: வருவாரா? வரமாட்டாரா?
Next articleஆஸ்திரேலியா அணிக்கு நடந்த வேதனை- உலக சாதனை மறக்க முடியுமா இன்று?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here