கேகேஆர் அணியின் பலம் பலவீனம்; கோப்பையை மூன்றாவது முறை வெல்லுமா?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல ஆயத்தமாகி வருகிறது.
நடிகர் ஷாருக்கான் உரிமையாளரான இந்த அணியில் 2008ஆம் ஆண்டு கங்குலி தலைமை தாங்கினார்.
2008 2009 2010 ஆம் ஆண்டு சொதப்பலான ஆட்டத்தால் லீக் போட்டியுடன் வெளியேறியது. 2011 ஆம் ஆண்டு கௌதம் கம்பீர் இந்த அணிக்கு கேப்டன் ஆனார்.
அந்த வருடம் ஐபிஎல்லில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா. 2012ஆம் ஆண்டு வெற்றி நடையில் கம்பீர நடை போட்டு இறுதி ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
2013ஆம் ஆண்டு லிக் போட்டியுடன் வெளியேறிய இந்த அணி, 2014 மீண்டும் தன் விஸ்வரூபத்தை காட்ட ஆரம்பித்தது.
இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.
2015 மற்றும் 2019ஆம் ஆண்டு லீக் போட்டியுடனும், 2016, 2017, 2018 ஆம் ஆண்டு ப்ளே ஆப் சுற்றுடன் வெளியேறியது.
கடந்த பன்னிரண்டு சீசன்களில் சவுரவ் கங்குலி, மெக்குல்லம், கிறிஸ் கெயில், டேவிட் ஹஸி, ரிக்கி பாண்டிங், மேத்யூஸ், இஷாந்த் சர்மா, அஜித் அகர்கர், அஜந்தா மென்டிஸ், பிராடு ஹாட்ஜ்,
மோர்னி மோர்க்கல், உத்தப்பா, கொல்டர் நைல் போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய இந்த அணி பலமுறை லீக் போட்டி உடனே வெளியேறியது தான் மிகப்பெரிய சோகம்.
கேகேஆர் அணியின் பலம் பலவீனம்
இந்த ஆண்டு பல அதிரடி வீரர்களை இந்த அணி வாங்கியுள்ளது, பேட் கம்மின்ஸ் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் ஆவார், 15.5 கோடி இவரது விலை.
இந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஆக நித்திஷ் ராணா, ஷப்னம் கில், சித்தேஷ் லேட், அயன் மோர்கன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்களாக இந்த அணி ஆன்ட்ரே ரசல், பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், கிரீஸ் கிரீன் உள்ளனர்.
விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மற்றும் தாம் பென்டன் வீரர்களும், பந்துவீச்சாளர்களாக குருனே, குல்திப் யாதவ், கிருஷ்ணா, சந்தீப் வாரியர்ஸ், வருன் சக்ரவர்த்தி, பெர்குசன் போன்ற வீரர்கள் உள்ளனர்.
தினேஷ் கார்த்திக் இந்த அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார் இந்த அணியின் பலவீனமே பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங் செய்யாதே.
இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட இந்த அணியின் முன்னாள் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் ஆவார்.
இந்த அணியில் இளம் வீரர்கள் இருந்தாலும், கடந்த ஆண்டு உலகக் கோப்பையை இங்கிலாந்து அணிக்கு வாங்கித்தந்த ஐயன் மோர்கன் இந்த அணியில் இருப்பது மிகப்பெரிய பலமே.
ஐபிஎல் போட்டி என்று சொன்னாலே சிக்ஸர் தான் அதற்குப் பெயர் போனவர் தான் ஆன்ட்ரே ரசல், பவுளராக வளம் வந்த சுனில் நரேன் கொல்கத்தா அணியில் ஓப்பனராக இறங்கி பந்துவீச்சாளர்களை பின்னி பெடலெடுத்து வருகிறார்.
கடந்த சீசன்களில் கிரிஸ் லின் மற்றும் சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி துவம்சம் செய்வார்கள். ஆனால் தற்போது கிறிஸ் லின் இந்த அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.