Home விளையாட்டு  இது ஷேவாக்கின் காதல் கதை !  கிரிக்கெட்  என்றாலே  வீரேந்தர் ஷேவாக்கை நினைவு படுத்திக் கொள்ளாமல்  இருக்கவே...

 இது ஷேவாக்கின் காதல் கதை !  கிரிக்கெட்  என்றாலே  வீரேந்தர் ஷேவாக்கை நினைவு படுத்திக் கொள்ளாமல்  இருக்கவே முடியாது . அந்த அளவிற்கு அதிரடி ஆட்டக்காரர் அவர் !

தனது  21 வது  வயதில்  ஆர்த்தியிடம்  தனது  காதலை மிக எளிமையாக , அதே நேரத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் வெளிப்படுத்தி விட்டார் . அதன் பிறகு  மூன்று  வருடங்கள்  காதலோ காதல் !  இவர்கள்  காதலிற்கு அவர்கள் இருவர் வீட்டிலும் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும் , அவர்களின் உறுதியான காதல் எல்லாவற்றையும் சரி செய்தது . இதே ஏப்ரல் 22 , 2004 ஆம் ஆண்டு டும் டும் டும்!

431
0

                                      இது ஷேவாக்கின் காதல் கதை ! 

 

அதிரடி சேவாக்

 

 கிரிக்கெட்  என்றாலே  வீரேந்தர் ஷேவாக்கை நினைவு படுத்திக் கொள்ளாமல்  இருக்கவே முடியாது . அந்த அளவிற்கு அதிரடி ஆட்டக்காரர் அவர் ! இன்று ( ஏப்ரல் 22 , 2004 ) அவர் திருமண  நாள் .

 

ஒருமுறை அவரிடம்  ஒரு நாள் கிரிக்கெட்  போட்டிக்கும் , டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி எழுப்பினர் !

அவரோ ஒரு நாள் போட்டி  என்றால் வண்ண நிற ஆடையில் விளையாடுவேன் , டெஸ்ட் போட்டி என்றால் வெள்ளை நிறம் . என்னுடைய உடையின் நிறங்கள் மாறும் ஆனால் என்னுடைய ஆட்டத்தின் பாணி அறவே மாறாது என்று கூறிவிட்டார் .

 

அவர் பேட்டிங் செய்யும்போது இந்திய அணிக்கு இருக்கும் நெருக்கடிகளை , சவால்களை அப்படியே எதிர் அணிக்கு மாற்றி விடுவார் ! என்னுடைய விக்கட்டை  நீங்கள் பெரிய பொருட்டாக கருதக்கூடாது , ஏன் என்றால் நான் தாக்குதல் ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறேன் என்று வெளிப்படையாகவே பேசுவார் .

 

காதலோ காதல் !

 

இதே ஏப்ரல் 22 , 2004 ஆம் ஆண்டு சேவாக் – ஆர்த்தி இருவருக்கும் திருமணம் ஆனது.

 

ஆனால் ஷேவாக்கிற்கு அவரது  ஆர்த்தியை 7 வயது முதலே தெரியும் , அப்போது ஆர்த்திக்கு 5 வயது தான்.

 

ஷேவாக்கின் குடும்பம் பெரிய கூட்டுக் குடும்பம் , அவர்களின் சிறு வயதில் நடந்த ஒரு திருமணத்தில் தான் சந்தித்துக் கொண்டனர்., அது ஒரு ஆழமான நட்பாக வளர்ந்தது.

 

கிரிக்கெட் தான் தனது முழு மூச்சு என்று முடிவு செய்த அதே நேரத்தில் ஆர்த்திதான் தமது வாழ்க்கைத்துணை என்று முடிவு செய்து விட்டார் ஷேவாக் .

 

தனது  21 வது  வயதில்  ஆர்த்தியிடம்  தனது  காதலை மிக எளிமையாக , அதே நேரத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் வெளிப்படுத்தி விட்டார் .

 

அதன் பிறகு  மூன்று  வருடங்கள்  காதலோ காதல் ! 

 

இவர்கள்  காதலிற்கு அவர்கள் இருவர் வீட்டிலும் ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும் , அவர்களின் உறுதியான காதல் எல்லாவற்றையும் சரி செய்தது .

 

இதே ஏப்ரல் 22 , 2004 ஆம் ஆண்டு டும் டும் டும் .

 

சா.ரா 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here