Ban vs Zim 1st t20; முதல் டி20 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி
வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுளள ஜிம்பாப்வே அணி மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்களில் விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே
முதலில் நடந்த ஒரு நாள் தொடரில் வங்கதேசத்திடம் ஒயிட்வாஷ் ஆனது. டாக்காவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
ஜிம்பாப்வே மறுபடியும் ஒருநாள் போட்டியில் செய்த தவறை டி20 முதல் போட்டியிலும் செய்தது.
முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி இருக்கலாம்.
தமிம், தாஸ் மீண்டும் அதிரடி
வங்கதேசம் அணி தொடக்க ஆட்டகாரர்களாக தமிம் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் களமிறங்கினார்கள்.
இருவரும் இணைந்து நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் நான்கு சதங்கள் அடித்தார்கள்.
அதே நிலைமை தான் இந்த போட்டியிலும் நடந்தது. முதல் விக்கெட்டை பிரிக்கவே ஜிம்பாப்வே அணிக்கு மிகவும் சிரமமாகவே உள்ளது.
10.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி.
200 ரன்கள் வங்கதேசம்
வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சௌமிய சர்கார் 62, தாஸ் 59, தமிம் 49, ரஹிம் 17, முகமதுல்லா 14 ரன்கள் எடுத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் ராசா மற்றும் மஞவேறே தலா ஒரு வஇக்கெட்டும் வீழ்த்தினர்.
ஜிம்பாப்வே தோல்வி
இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டும் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தது.
ஜிம்பாப்வே அதிகபட்சமாக கமுங்கூகம்வே 28 , மும்பா 25, திரிபானோ, வில்லியம்ஸ் மற்றும் முடுபம்பி தலா 20 ரன்கள் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் முஸ்தாபிகுர் மற்றும் இஸ்லாம் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் விருதை 62 ரன்கள் எடுத்த சௌமிய சர்கார் வாங்கினார்.
ஜிம்பாப்வே பலவீனம்
ஜிம்பாப்வே அணி பலம் வாய்ந்த அணி தான் கேப்டன் எடுக்கும் சில தவறாலே வங்கதேசதிடம் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்கிறது. பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் கூடுதல் கவனம் தேவை.
இர்ணடாவது மற்றும் கடைசி டி20 போட்டி இதே மைதானத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.