Home விளையாட்டு அம்பதி ராயுடுவிற்கு பிடித்த அணி சென்னையா இல்லை மும்பையா

அம்பதி ராயுடுவிற்கு பிடித்த அணி சென்னையா இல்லை மும்பையா

282
0
அம்பத்தி ராயுடுவிற்கு

அம்பதி ராயுடுவிற்கு பிடித்த அணி சென்னையா இல்லை மும்பையா, இன்ஸ்டாகிரம் பக்கத்தில் நடந்த லைவ் செசனில்  விருப்பமான அணியை தேர்வு செய்தார் ராயுடு.

8 வருடங்களாக மும்பை அணிக்கு விளையாடிய ராயுடு கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அந்த சீசனில் 602 ரன்கள் எடுத்து சென்னை 3வது முறை சாம்பியன் ஆக உதவி செய்தார்.

மேலும் ராயுடு மும்பை அணி மூன்று முறை கோப்பை வெல்லும் பொழுது அதற்கு உதவிகரமாக இருந்தவர் என்பது மறுக்கமுடியாத ஒன்று.

இது குறித்து அம்பத்தி ராயுடு கூறியதாவது, இரண்டு அணிகளுக்கு மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. சென்னை அணியில் மிகவும் சவுகரியமாக இருந்தேன்.

பிரஷர் ஏதும் இல்லை வாய்ப்புகள் போதுமான அளவு அளிக்கப்பட்டது. ஒரு வீரரின் திறமையின் மீது மதிப்பு வைத்து அவருக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும்.

மும்பை அணியில் நமக்கு கொடுக்கும் வேலையை நாம் சரியாக செய்ய வேண்டும். மற்றபடி வேற சலுகைகள் நமக்கு கிடைக்காது. மும்பையை விட எனக்கு சென்னையில் அதிக வாய்ப்பும் ஆதரவும் கிடைத்தது.

சென்னை அணியின் ரசிகர்கள் உலகத்தில் சிறந்தவர்கள் வீரர்களுக்கும் அணிக்கும் சிறந்த ஆதரவு தருவார்கள். அவர்கள் எமோஷனல் ஆவனவர்கள். இந்தியா அணிக்கு கூட இத்தகைய ரசிகர் பட்டாளம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here