மார்ச் 12 : வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுளள ஜிம்பாப்வே அணி, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்களில் விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற வங்கதேசம்
முதலில் நடந்த ஒரு நாள் தொடரில் வங்கதேசத்திடம் ஜிம்பாப்வே ஒயிட்வாஷ் ஆனது. டாக்காவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 48 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது
இதே மைதானத்தில் இரண்டாவது போட்டி நேற்று நடந்தது டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தச் சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக ஜிம்பாப்வே அணி இந்த போட்டியில் தான் முதலில் பேட்டிங் செய்தது
ஜிம்பாப்வே 119 ரன்கள்
ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக பிரன்டன் டெய்லர் 59, கிரைய்க் எர்வின் 29, ராசா 12, கமுன்கமுவே 10, கேப்டன் சீன் வில்லியம்ஸ் 3 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் முஸ்தாபிகுர் மற்றும் அல் அமின் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழத்தினர்.
வங்கதேசம் வெற்றி
120ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய வங்கதேசம் 15.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வென்று, 2-0 கணக்கில் தொடரை ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்து வீட்டிக்கு அனுப்பியது.
வங்கதேசம் தரப்பில் லித்தன் தாஸ் முதல் போட்டியை போல இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார், இந்த போட்டியில் 60 ரன்னும், நைம் 33 ரன்னும், சௌமிய சர்கார் 20 ரன்னும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே அணியில் பெரிதாக பந்துவீச்சில் எந்த தாக்கமும் இல்லை, மேஃபு மட்டும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆட்டநாயகன் விருது
ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை லித்தன் தாஸ் தட்டி சென்றார். இவர் நடந்து முடிந்த ஒருநாள் போட்டியில் இரண்டு ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வெனறது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர் முழுவதும் லித்தன் தாஸ் தன் முழு திறமையையும் நிருபித்துள்ளார். ஒருநாள் போட்டியில்
126,176 ரன்களும், டி20 யில் 60, 59 ரன்களும் எடுத்துள்ளார்.
வங்கதேசம் வந்த ஜிம்பாபவே அணிக்கு ஒரு போட்டியில் கூட வெற்றி கையில் சிக்கவில்லை. ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் ஜிம்பாப்வேக்கு வெள்ளை அடித்து வீட்டுக்கு அனுப்பியது.