Home விளையாட்டு மகேந்திர சிங் தோனி இனி இல்லை பிசிசிஐ இன்ஸ்டாகிராம்

மகேந்திர சிங் தோனி இனி இல்லை பிசிசிஐ இன்ஸ்டாகிராம்

325
0

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் பின்தொடர்பவர்கள் கொண்டாடும் விதமாக பிசிசிஐ வெளியிட்ட புகைப்படத்தில் மகேந்திர சிங் தோனி இடம்பெறவில்லை.

2019ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்கு பிறகு மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை.

வருடாந்திர ஊதிய பட்டியலிலும் தோனியை விலகியது பிசிசிஐ.

ஐபிஎல் போட்டியில் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என தோனிக்கு கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டியை ஒத்தி வைத்தது பிசிசிஐ.

ஒன்பது மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வருகிறார் மகேந்திர சிங் தோனி.

தற்போது பிசிசிஐ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் 13 மில்லியனை கடந்தது.

இதை கொண்டாடும் விதமாக பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் நடுவில் 13M என்றும், அதைச் சுற்றி இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.

வீரர்களில் விராட் கோலி, தவான், ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர், பும்ரா, கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்

மகளிர் அணி சார்பாக ஹர்மன்ப்ரீத் காவுர், பூனம் யாதவ், ஸ்மிருதி மந்தனா போன்ற வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

2008 ஆம் ஆண்டு 2011 ஆம் ஆண்டு 2013 ஆண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த தல தோனிக்கு இடமில்லை என்பது வருத்தமளிக்கிறது.

பிசிசிஐ தோனியை ஓரம்கட்டி வருகிறதா என்பது சந்தேகம் எழுந்துள்ளது.

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 20 ஓவர் உலகக் கோப்பையில் தோனி அணியில் இடம் பிடிப்பாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here