பூம்பூம் அப்ரிடி பிறந்ததினம் இன்று. பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் என்று சொன்னால் உடனே நமக்கு ஞாபகம் வருவது அப்ரிடி தான்.
அதிரடி மன்னன் அஃப்ரீடி
2014 ஆண்டு முன்னாடி வரைக்கும் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் அப்ரிடி. 1996 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 37 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார், 18 வருடமாக இந்த சாதனைக்கு சொந்தக்காரர் தான் அப்ரிடி.
2014 ஆம் ஆண்டு கோரி ஆண்டர்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதமடித்து இவரது சாதனையை முறியடித்தார்.
கோரி ஆண்டர்சன்,ஆண்டர்சன் படைத்த சாதனையை கூட 2015 ஆம் ஆண்டு ஏபி டிவிலியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 31 பந்துகளில் சதம் அடித்து முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்ரிடி அனைத்து நாட்டு ரசிகர்களுக்கும் பிடித்தமானவர், சேவாக் வருகைக்கு முன்னால் வரைக்கும் அதிரடி என்றால் அது அப்ரிடி தான்.
பூம் பூம் அஃப்ரீடி
1980 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்வா எனும் ஊரில் பிறந்தவர் தான் ஷாகிப் சாதா முகமது சாகித் கான் அப்ரிடி. இவரை செல்லமாக பூம் பூம் அப்ரிடி என்று அழைப்பார்கள்.
ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் சாகித் அப்ரிடி முதலிடத்தில் இருக்கிறார் 398 போட்டிகளில் 351 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.
1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கென்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டி20 போட்டியுடன் விடைபெற்றார்.
27 டெஸ்ட் போட்டி 398 ஒருநாள் போட்டி 99 மற்றும் டி20 போட்டி விளையாடியுள்ளார்.
இவர் விளையாடிய 624 சர்வதேச போட்டிகளில் 11196 ரன்கள் சேர்த்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் 541 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டர் ஆகவும் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.