உனக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்தாலே ரிஷப் பந்த் உயர்ந்த இடத்தை நோக்கி நகரலாம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் பந்த்க்கு அட்வைஸ் கூறியுள்ளார்
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்விக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி அணியில் இடம்பெறாமல் இருந்துவருகிறார்.
ராணுவத்தில் பயிற்சி மேற்கொள்ள இந்திய கிரிக்கெட்டுக்கு சில நாட்கள் விடுப்பு எடுத்து சென்றார், பிறகு பயிற்சி முடிந்த அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் அவர் அணிக்கு திரும்பவில்லை. பிசிசிஐ மகேந்திர சிங் தோனியை வருடாந்திர ஊதிய பட்டியலில் இருந்து திடீரென நீக்கியது.
இதனால் அவரது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது என முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.
அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்தார். ஐபிஎல் போட்டியில் தனது அதிரடியால் இந்திய ரசிகர்களை கவர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் சுக்கு நூறாகி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
மகேந்திர சிங் தோனி போல துணிச்சலாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மறையாக விளையாடி வருகிறார்.
இதனால் இவர் தோனியின் இடத்திற்கு சரிப்பட்டு வரமாட்டார் என விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் ரிஷப் பந்த் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
“தோனி போன்ற மிகப் பெரிய வீரரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினமான ஒன்று ரிஷப் பந்த் இளம் வீரர் ஆவார். அவரை இளம் வயதிலேயே தோனியின் இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டாம்.
அது அவருக்கு மிகுந்த நெருக்கடியை தள்ளிவிடும். அவர் அந்த மனநிலையில் விக்கெட் கீப்பிங் பணியையும் செய்யக்கூடாது.
தன்னுடைய திறன் எதுவோ அதை சார்ந்து அவர் செயல்பட்டால் வரும் காலங்களில் உயர்ந்த இடத்தை நோக்கி நகரலாம்
எனக் கூறிவிட்டு டோனியை போல் செயல்பட நினைக்காமல் தனக்கு என்ன வருமோ அதை செய்தாலே பண்ட் சாதிக்கலாம்” என கூறியுள்ளார்