கிரிக்கெட்டுக்கு பரவிய கொரோனா வைரஸ்
ஐபிஎல் போட்டி தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடர் லிஜெண்ட் கிரிக்கெட் போட்டி ஐபிஎல் போட்டி என அனைத்தையும் இந்திய நிர்வாகம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது
இந்தியாவில் கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவி வருகிறது, அதனால் வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்தியா வந்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் மழை காரணமாக கைவிடப்பட்டது.
மேலும் இரண்டு போட்டிகள் மீதம் இருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியுடன் ஒருநாள் தொடரை இந்தியா தற்போது நிறுத்தி வைத்து தென்ஆப்பிரிக்கா வீரர்களை பாதுகாப்பு காரணமாக திருப்பி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரோடு சேப்டி வேர்ல்டு சீரியஸ் தொடர் கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கியது. ஏற்கனவே நான்கு போட்டிகள் முடிந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்திற்காக மே மாதத்திலிருந்து அக்டோபர் மாதத்திற்குள் வீரர்கள் நேர வசதிக்கேற்ப போட்டிகள் நடத்தப்படலாம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்படும் என இந்த தொடரை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது.
ஏற்கனவே ரங்கனா ஹெராத், அட்டப்பட்டு, முத்தையா முரளிதரன் போன்ற வீரர்கள் நாடு திரும்பிய நிலையில், மீதம் உள்ள வீரர்கள் இன்று அவரவர் நாட்டுக்கு திரும்பிச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு ஐபிஎல் வருகிற மார்ச் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி அட்டவணையை இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 5000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கும் மேலான நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ், தற்போது இந்தியாவிலும் பரவி 82 பேர்களிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் மேலும் பரவக் கூடும் என்பதால் கிரிக்கெட் போட்டியில் ஏராளமான ரசிகர்கள் கூடுவதால் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் நலனை கருத்தில் கொண்டு பாதிப்பு ஏற்படாமலிருக்க போட்டியை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதலில் ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டி நடத்தலாம் என நிர்வாகம் ஆலோசித்து வந்த நிலையில் போட்டியை தற்போது தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது
மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக போட்டிகளை ரத்து செய்துள்ளது.