Home விளையாட்டு CSK முன்னாள் வீரரால் தென் ஆப்பிரிக்கா லிஜெண்ட் அணி வெற்றி.

CSK முன்னாள் வீரரால் தென் ஆப்பிரிக்கா லிஜெண்ட் அணி வெற்றி.

280
0

கடந்த மார்ச் 7ம் தேதி தொடங்கிய ‘ரோடு சேப்டி வேர்ல்டு தொடர்’ போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை,  தென்னாப்பிரிக்கா என ஐந்து அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகிறது.

நேற்று நான்காவது லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது

வெஸ்ட் இண்டீஸ் 143 ரன்கள்

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக டேரன் கங்கா 31, சந்தர்பால் 21, பவள் 30, ஹயத் 14, கூப்பர் 23, பெஸ்ட் 10 ரன்களும் எடுத்தனர்.

தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் பால் ஹாரிஸ் 3, அல்பி மோர்கல் 2 விக்கெட்டும், வாண்டர்வாத் மற்றும் மெக்லரென் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

தென் ஆப்பிரிக்கா வெற்றி

144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஜான்டி ரோட்ஸ் 53, அல்பி மோர்கல் 54 ரன்களும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் பெஸ்ட் 2 விக்கெட்டும், சுலைமான் பென் மற்றும் சன் போடு ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்

ஆட்டநாயகன் விருதை 2 விக்கெட் மற்றும் 54 ரன்கள் எடுத்த சிஎஸ்கே(CSK) வின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் அல்பி மோர்க்கல் வென்றார்.

38 வயதான அல்பி மோர்க்கல் 2008 – 2013 ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த போட்டி

ஏற்கனவே வெஸ்ட்இண்டீஸ் லிஜெண்ட் அணி முதல் லீக் போட்டியில் இந்திய லிஜெண்ட் அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்த போட்டி நாளை மார்ச்சு 13ஆம் தேதி ஸ்ரீலங்கா லெஜெண்ட் அணியுடன் மும்பையில் மோதுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here