தோனி இனி இந்திய அணிக்கு சரிப்பட்டு வரமாட்டார் எனக் கூறிய முன்னாள் இந்திய வீரர். யார் அவர்? ஏன் தோனி இனி இந்திய அணிக்கு தேவை இல்லை எனக் கூறினார்.
கடந்த உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் பங்கேற்காத தோனி ஐபில் போட்டியில் ஆட தயாராக உள்ளார்.
இதன் பிறகு டி20 போட்டியில் பங்கேற்பார் என எல்லாருமே எதிர்பார்க்க, தோனியின் எதிர்காலம் என்ன மறுபக்கம் கேள்வியும் எழுகிறது.
இந்தியா முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், தோனி இந்திய அணிக்காக விளையாடும் அளவிற்கு உடல் தகுதியில் இல்லை எனக் கூறியுள்ளார்.
அவருடைய இடத்தில் ராகுல் மிக சிறப்பாக செயல்படுகிறார். மேலும் ரிசப் பண்ட் மற்றொரு கீப்பர் இருக்கிறார். ஹார்டிக் பாண்டியாவும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இதனால் தோனியின் பங்களிப்பு இந்தியா அணிக்கு இனி தேவைப்படாது என சேவாக் தெரிவித்துள்ளார்.