Home வரலாறு பாகிஸ்தான் சாம்பியன் : 1992 உலக கோப்பை

பாகிஸ்தான் சாம்பியன் : 1992 உலக கோப்பை

314
0

இங்கிலாந்தை 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றிய நாள் இன்று.

ரவுண்ட் ராபின்

1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்திய உலக கோப்பையில் புதிய ரவுண்ட் ராபின் என்ற லீக் போட்டியை அறிமுகப்படுத்தினார்கள்.

அதாவது விளையாட உள்ள ஒன்பது அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும்.

ஒரு அணிக்கு மொத்தம் 8 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே என 9 அணிகள் பங்கு பெற்றன.

இந்த உலக கோப்பை தான் முன்னணி ஜாம்பவானான கபில் தேவுக்கு கடைசி உலகக் கோப்பையாக அமைந்தது

இந்திய அணி

இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், ரவிசாஸ்திரி, கபில்தேவ், வினோத் காம்ப்ளி, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், அஜய் ஜடேஜா, ஜவகல் ஸ்ரீநாத்,  கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்ற வீரர்கள் களம் இறங்கினார்கள்.

ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியாவில் ஆலன் பார்டர், டாம் மூடி, அயன் ஹீலி, மார்க் டெய்லர், மார்க் வாஹ், ஸ்டீவ் வாஹ் போன்ற வீரர்கள் களம் இறங்கினார்கள்.

நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா தான் சொந்த மண்ணில் விளையாடுவதால் பலம் வாய்ந்ததாக இருந்தது.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தானில் இம்ரான் கான், ஜாவித் மியாண்டட், வாசிம் அக்ரம், அமீர் சோகைல், மொயின் கான், இன்சமாம் உல் ஹாக் போன்ற வீரர்கள் களம் இறங்கினார்கள்.

இந்திய அணி  பாகிஸ்தானை 43 ரன்கள் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வே வை 55 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

புள்ளிபட்டியல்

இந்திய அணி 8ல் இப்போட்டிகளில் இரண்டில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்தது.

ஆஸ்திரேலியா அணி போட்டியை நடத்தினாலும் நான்கு போட்டிகளில் மட்டும் என்று ஐந்தாம் இடத்தை பிடித்தது.

நியூசிலாந்து அணி 7 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இரண்டாவது இடத்தை 5 வெற்றிகளுடன் இங்கிலாந்து பெற்றது.

5 வெற்றிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. நான்கு போட்டிகளை வென்று ஒரு போட்டி சமம் ஆனதால் 9 புள்ளிகளுடன் பாகிஸ்தான் நான்காவது இடத்தைப் பிடித்தது.

இலங்கை எட்டாவது இடத்தில் ஜிம்பாப்வே அணி 9வது இடத்தையும் பிடித்தது.

நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் என்று நான்கு நாடுகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரையிறுதி

மார்ச் 21ம் தேதி நடந்த முதல் அரையிறுதி போட்டியிலும் நியூசிலாந்து – பாகிஸ்தான் மோதின.

ரவுண்ட் ராபின் சுற்றில் ஒரு தோல்வியை மட்டும் பெற்று 7 போட்டிகளில் வெற்றி கண்ட நியூஸிலாந்து அணி,

அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் சொந்த நாட்டில் சொந்த ரசிகர்கள் மத்தியில் தோல்வியடைந்தது.

ரவுண்ட் ராபின் சுற்றில் அரையிறுதிக்கு கடைசி அணியாக தகுதி பெற்ற பாகிஸ்தான் அரையிறுதியில்  முதல் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இரண்டாவது அரையிறுதி

மார்ச் 22 ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியில் 19 வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இறுதி போட்டி

மார்ச் 25ஆம் தேதி மிகப்பெரிய மெல்போர்ன் மைதானத்தில் இறுதிப்போட்டி 87000 ரசிகர்கள் கூடியிருந்தார்கள் .

ஆஸ்திரேலியாவின் பரம எதிரியான இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இறுதிப் போட்டி தொடங்கியது.

அங்கு குழுமியிருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் பாகிஸ்தான் அணிக்கு துணை நின்றார்கள்.

பாகிஸ்தான் 249

டாஸ் வென்ற பாகிஸ்தானின் இம்ரான்கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் கேப்டன் இம்ரான் கான் 72 ரன்கள், ஜாவித் மியான்தத் 58 ரன்கள், இன்சமாம் உள் ஹாக் 33 ரன்கள், வாசிம் அக்ரம் 42 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் பிரிங்கிலே 3 விக்கெட்டும், போத்தம் மற்றும் இல்லிங்வெர்த் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

250 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி உலககோப்பையை பெறலாம் என்று கனவோடு களமிறங்கினார்.

அருமையான பந்துவீச்சு

பாகிஸ்தான் பவுலர்கள் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களை பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திய வண்ணம் இருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று விடும் என்று அங்கு கூடியிருந்த ரசிகர்கள் எண்ணியிருந்தார்கள்.

ஆனால் அதை வாசிம் அக்ரம் மற்றும் முஸ்தாக் அகமது உடைத்து காட்டினார்கள்.

இங்கிலாந்து தோல்வி

இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 227 ரன்கள் மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் உலக கோப்பையை விட்டுக் கொடுத்தது.

இங்கிலாந்து அணிகள் அதிகபட்சமாக ஃபேர்பிரதர் 62, கூச் 29, லாம்ப் 31 ரன்கள் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் வாசிம் அக்ரம் மற்றும் முஸ்தாக் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜாவத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன் விருது

ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வாசிம் அக்ரம் வென்றார். இந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதும் இவரே.

தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணி மார்ட்டின் குருவே வென்றார். இந்த உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரரும் ஆவார்.

சாம்பியன்

ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தானின் கேப்டன் இம்ரான் கான் கோப்பையை தூக்கி நாங்கள் சாம்பியன் என்று நிரூபித்த நாள் இன்று.

இம்ரான் கான் தற்போதைய பாகிஸ்தான் பிரதமரும் ஆவார்.

Previous articleகொரோனா 144 தடை உத்தரவு நாம் என்ன செய்யலாம்?
Next articleமகேந்திர சிங் தோனி இனி இல்லை பிசிசிஐ இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here