கொரோனா பாதிப்பு காரணமாக உலகமே அடைபட்டு உள்ளது.நிறுவனங்கள், வகுப்புகள் எல்லாம் ஆன்லைனை மட்டுமே நம்பியுள்ளது. வகுப்புகள், வியாபாரம் எல்லாமே முடங்கி விட்டது இருந்தாலும் ஆன்லைன் பயிற்சிகள் சற்று கை கொடுக்கிறது.இந்நிலையில் அணைத்து வகை விளையாட்டுப் போட்டிகளும் நிறுத்திவைக்கப் பட்டுள்ள நிலையில், பல நிறுவனங்கள் ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பும், இந்திய விளையாட்டு கூட்டமைப்பும் இணைந்து பயிற்ச்சி வகுப்பு நடத்தியது.
சுமார் 700 உள்நாடு மற்றும் சர்வதேச வீரர்கள் வீடியோ காண்பிரண்ஸ் மூலம் பங்குபெற்றனர். அப்போது பயிற்சிக்கு இடைஇடையே ஆபாச மற்றும் நிர்வாண படங்கள் தோன்றியதால் பலர் அதிருப்தி அடைந்தனர்.
இந்திய நட்சத்திர பயிற்சியாளர் கோபிசந்த் இதனால் அதிருப்தியுடன் வெளியேறினார். அவர் முன்னாள் இந்திய வீரர், கோபிசந்த் பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார். அதில் இந்திய வீராங்கனை, ஒலிம்பிக் புகழ் பி.வி.சிந்துவும் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிட தக்கது.
பலர் குழந்தைகளுடனும், குடும்பத்தாருடனும் இப்பயிற்சியில் பங்கேற்றதால் சர்ச்சையும், சலசலப்பும் ஏற்பட்டது.
இது தொழில் நுட்ப கோளாறால் ஏற்பட்ட நிகழ்வு என இந்திய பேட்மிண்டன் கூட்டமைப்பும், இந்திய விளையாட்டு கூட்டமைப்பும்விளக்கம் அளித்துள்ளது.
சா.ரா .