ராகுல் ட்ராவிட் மகன் சமித் ட்ராவிட் அண்டர் 14 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரட்டை சதம் உட்பட 295 ரன்கள், 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
கிரிக்கெட் சம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தந்தையை போன்றே இந்திய அணியில் இடம் பெற்று சாதிக்க வேண்டும் என கடுமையாக பயிற்சி பெற்று வருகிறார்.
அவரை போன்றே முன்னாள் இந்திய அணியின் கேப்டன் ராகுல் ட்ராவிட் மகன் சமித் ட்ராவிட் 14 நான்கு வயதில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட் தொடர்
கர்நாடகா மாநில கிரிக்கெட் அமைப்பு 14 வயதிற்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தியது.
வைஸ் ப்ரெசிடென்ட் லெவன் அணியும், தர்வாத் ஜோன் அணியும் மோதியது. வைஸ் ப்ரெசிடென்ட் அணிக்காக சமித் ட்ராவிட் விளையாடினார்.
இரட்டை சதம்
அப்போட்டியில் 256 பந்துகளில் 22 பவுண்டரிகள் உட்பட 201 ரன்கள் விளாசினார் சமித். இரண்டாவது இன்னிங்க்ஸிலும் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் குவித்தார்.
பேட்டிங் மட்டுமல்ல பந்து வீச்சிலும் சமித் படு சுட்டி. 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும் இந்தப் போட்டி ட்ராவில் முடிந்தது.
முதல் போட்டி அல்ல
இது ஒன்றும் புதிதல்ல, இதற்கு முன் கர்நாடக மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 150 ரன்கள் குவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த டைகர் கோப்பை போட்டியில் 125 ரன்கள் குவித்து அசத்தினார்.
தடுப்புச்சுவர் ட்ராவிட்
இந்திய அணியின் தடுப்புச்சுவர் எனப் பெயர் பெற்றவர் ராகுல் ட்ராவிட். ட்ராவிட்டின் விக்கெட்டை கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல.
அதேபோல், அவருடைய மகனும் விக்கெட்டையும் எளிதில் விடாமல் ரன்களையும் வேகமாக குவிக்கின்றார். மேலும் பவுலிங்கிலும் அசத்துகிறார்.