Ranji trophy Updates; இறுதி போட்டி குஜராத் – பெங்கால் அணிகள்
ரஞ்சி போட்டி இறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகள்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தொடங்கிய 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான ரஞ்சிப் போட்டி இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது
இந்த வருடம் 38 அணிகள் பங்கு பெற்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முதல் அரையிறுதி போட்டிகள் பெங்கால் மற்றும் கர்நாடகாவும், இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் சௌராஷ்டிரா மற்றும் குஜராத் அணிகள் மோதின.
பெங்கால் மற்றும் கர்நாடகா
முதல் அரையிறுதியில் அனுபவம் இல்லாத பெங்கால் அணி அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலும், பல அனுபவ வீரர்களை கொண்ட கருண் நாயர் தலைமையில் கர்நாடகா அணிகளும் மோதின.
மஜூம்தார் சதத்துடன் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 312 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி 122 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
பெங்கால் வெற்றி
190 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த பெங்கால் அணி 161 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கர்நாடக அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன் மூலம் 174 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணியை பெங்கால் அணி வீழ்த்தியது.
முஜும்தார் ஆட்டநாயகன்
முதல் இன்னிங்சில் 149 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்த முஜும்தார் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
பெங்கால் அணி தரப்பில் முதல் இன்னிங்சில் இசாந்த் போரேல் 5 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் முகேஷ் குமார் 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
குஜராத் மற்றும் சௌராஷ்டிரா
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி சவுராஷ்டிரா, ஜாக்சன் சதத்துடன் 304 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய குஜராத் அணி ரஜுல் பட் 71 ரன்கள் துணையுடன் 252 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
52 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய சௌராஷ்ட்ரா அணி வசுவாடா 139 ரன்கள் சதத்தில் 274 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
சௌராஷ்ட்ரா வெற்றி
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி பர்திவ் படெல் 93 மற்றும் காந்தி 96 ரன்கள் எடுத்தும் 234 ரன்கள் மட்டுமே எடுத்து, 92 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணியிடம் தோல்வி அடைந்தது.
இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்த ஆர்பிட் வசுவாடா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இறுதிப்போட்டி
வருகிற மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பெங்கால் மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.
ரஞ்சி போட்டிகளில் இதுவரை பெங்கால் அணி இரு தடவையும், சவுராஷ்டிரா அணி இரண்டு தடவையும் கோப்பையை வென்றுள்ளது.
இதுவரையில் ரஞ்சி போட்டி
இதுவரை ரஞ்சி போட்டிகளில் மும்பை அணி 41 தடவை கோப்பையையும், இரண்டாமிடத்தில் உள்ள கர்நாடகா எட்டுத் தடவையும், தமிழ்நாடு இரு தடவையும் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.