ரொனால்டோ மட்டும் என்ன விதிவிலக்கா? கூறும் ரமோஸ், நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ பயிற்சியில் ஈடுபட்டது சர்ச்சையை உள்ளாக்கியது.
உலகமே சமூக விலகளில் இருக்கும் நேரத்தில் போர்ச்சுகல் மற்றும் ஜூவேண்டஸ் அணியின் வீரர் ரொனால்டோ தனது சக வீரர்களுடன் மடியர மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அங்குள்ள நிர்வாகிகள், மக்கள் மற்றும் பிற மூத்த வீரர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரொனால்டோவிற்கு என தனி சலுகைகள் கிடையாது. மற்ற மக்களை போல் அரசாங்க விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மடியர மைதான இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான இளைஞர்களுக்கு உதாரணமாக விளங்கும் ரொனால்டோ கண்டிப்பாக அரசாங்க உத்தரவை கடைபிடிப்பதே நல்லது. வீட்டில் இருந்து சமூக விலகலை ஊக்குவிக்க வேண்டுமென ரியல் மாட்ரிட் வீரர் செரிஜியோ ரமோஸ் கூறினார்.
கிறிஸ்டியனோ ரொனால்டோ கடைசியாக மார்ச் 8ஆம் தேதி சர்வதேச போட்டி ஜூவெந்த்ஸ அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.