90’கிட்ஸ் நினைவு தெரிந்து கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை நியூஸிலாந்து அணியில் விளையாடி கொண்டிருப்பவர் தான் ராஸ் டெய்லர்.
மூன்று சதம் கண்ட டெய்லர்
ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நான்காவதாக களமிறங்க கூடியவர்தான் ராஸ் டெய்லர். மூன்று வகையான போட்டிகளிலும் 100 போட்டியில் விளையாடிய பெருமை ராஸ் டெய்லரே சேரும் .
பிறந்த இடம்
இவருடைய முழு பெயர் லுடேரு ரோஸ் பூட்டோவா லோட் டெய்லர். மார்ச் 8 ஆம் தேதி 1984 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள வெல்லிங்டன் மாநிலத்தில் லோயர் கட் என்ற இடத்தில் பிறந்தவர் தான் ராஸ் டைலர் ராஸ் டெய்லர்.
அறிமுக போட்டி
2006 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், 2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில், 2006 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவுக்கு எதிராக டி20 போட்டியிலும் அறிமுகமானவர்தான் ராஸ் டெய்லர்.
இவர் டெஸ்ட் போட்டியில் 101 டெஸ்டுகள் விளையாடி 7328 ரன்கள் குவித்து, சராசரி 46 வைத்துள்ளார்.
இதில் 19 சதங்களும் 33 அரை சதங்களும் அடங்கும்.
தனிநபர் அதிகபட்சமாக 290 ரன்கள் எடுத்துள்ளார் இது நியூசிலாந்தில் மூன்றாவது அதிகபட்ச ரன் ஆகும்.
நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்த பட்டியலில் ராஸ் டைலர் கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய தொடரில் முதலிடத்தை பிடித்தார்.
டெய்லர் கிரிக்கெட் குறிப்புகள்
231 ஒருநாள் போட்டியில் விளையாடிய இவர் 8520 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 48 வைத்துள்ள இவர், அதிகபட்சமாக 181 ரன்கள் குவித்துள்ளார். இதில் 21 சதங்களும் 56 அரை சதங்களும் அடங்கும்.
100 டி20 போட்டியில் விளையாடிய இவர் 1909 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 63 எடுத்து, சராசரி 26 வைத்துள்ளார்.
கேப்டனாக டெய்லர்
இவர் 20 ஒருநாள் போட்டி, 14 டெஸ்ட் போட்டி, 13 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து வந்துள்ளார்.
ஐபிஎலில் இவர்
ஐபிஎல் 2008- 2010 ஆம் ஆண்டு வரைக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு விளையாடி உள்ளார். ஒரு போட்டியில் அதிரடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 33 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகர்களை கவர்ந்தார்.
2011 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 4.6 கோடி அதிக தொகைக்கு விலை போனார். 2012 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தாவினார்.
2013 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்கு மாறி, மீண்டும் 2014 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு திரும்பினார்.
டெய்லரின் சாதனைகள்
* டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த நியூசிலாந்து வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
* நான்காவது வீரராக களமிறங்கி அதிக ரன் குவித்த பட்டியலில் நியூசிலாந்து வீரர்களில் முதலிடத்தில். சர்வதேச அளவில் ஆறாவது இடத்திலும் உள்ளார்.
- நியூசிலாந்து அணியில் ஒருநாள் போட்டிகளில் அதிக சராசரி வைத்துள்ள வீரர் ராஸ் டெய்லர் 48.69.
* ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் மற்றும் அதிக அரைசதம் அடித்த நியூசிலாந்து வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.
இவர் இன்று தனது 35 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.