RSAvsAUS T20: தென் ஆப்பிரிக்காவிக்கு எதிரான டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா. SOUTH AFRICA VS AUSTRALIA T20 SERIES. Sports News in Tamil. விளையாட்டுச்செய்திகள்.
பிப்.27: கேப் டவுனில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா மூன்றாவது டி20 போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியா வென்றது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு
ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டகாரர்கள் பின்ச் மற்றும் வார்னர் முதல் விக்கெட்டுக்கு 11.3 ஓவர்களில் 120 ரன்கள் சேர்த்தனர்.
இருவரும் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சிக்ஸரும் பவுண்டரியுமாய் பறக்க விட்டனர். பின்ச் 37 பந்துகளில் 55 ரன்னும், வார்னர் 37 பந்துகளில் 57 ரன்களும் எடுத்தனர். ஸ்டீவ் ஸ்மித் தனது பங்குக்கு 15 பந்துகளில் 30 ரன்கள் சேரத்தார்.
ஆஸ்திரேலியா இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சேர்ததது. தென் ஆப்ரிக்கா தர்ப்பில் நாரட்ஜே 4 ஓவரில் 46 ரன்களும், ரபாடா மற்றும் ப்ரிட்டுரீஸ் நான்கு ஓவருக்கு தலா 42 ரன்களும் வாரி வழங்கினர்.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.3 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாது.
ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை கடைசி மற்றும் இறுதி போட்டியில் வென்றது. 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா.
தென் ஆப்பிரிக்காவின் வான் டர் துஷன் 24 ரன்னும், கிளாஸன் 22 ரன்னும், மில்லர் 15 ரன்களும் எடுத்தனர் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினார்கள்.
ஆஸ்திரேலியா தர்பபில் ஸ்டார்க் மற்றும் ஆஸ்டன் அகர் தலா 3 விக்கெட்டும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
ஆட்டநாயகன் விருதை மிட்சல் ஸ்டார்க் வென்றார், தொடர் நாயகன் விருதை ஆரோன் பின்ச் வென்றார்.
RSAvsAUS T20 மோசமான சாதனை
96 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்காவுக்கு இது இரண்டாவது குறைந்த ஸ்கோர் ஆகும். இதே தொடரில் 89 ரன்கள் எடுத்ததே தென் ஆப்பிரிக்காவின் குறைந்தபட்ச அணி ஸ்கோராகும்.
போட்டி நடந்த மைதானத்திலும் குறைந்த பட்ச ஸ்கோர் 96 ரன்களே. இதற்கு முன் ஆஸ்திரேலியாக்கு எதிராக 2007-ஆம் ஆண்டு இலங்கை எடுத்த 101 ரனை இப்போட்டி பின்னுக்குத் தள்ளி உள்ளது.
2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை தன் சொந்த மண்ணில் வென்றதில்லை.
தென் ஆப்பிரிக்கா இந்த தொடரில் பெறும் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாகும். முதல் டி20-யில் 107 ரன்களில் தோற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர் தோல்வியால் துவழும் தென்னாப்ரிக்கா
இந்த இரண்டு மிகப்பெரிய தோல்வியும் தென் ஆப்பிரிக்கா டி20 வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாகும். தென் ஆப்பிரிக்கா கடந்த சில மாதங்களாகவே தோல்வியை சந்தித்து வருகிறது.
தொடர் தோல்வியால் டு பிளஸ்ஸிஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு தலைவராக ஸ்மித் இருந்துவருகிறார். மார்க் பவுச்சர் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார்,
ஆனாலும் சிறந்த அணியை உருவாக்க சிரமப்பட்டு வருகிறார்கள். ஆப்பிரிக்காவின் 360 டிகிரி டிவில்லியர்ஸ் என்று ஓய்வு அறிவித்தாரோ அன்று ஆரம்பமானது தென் ஆப்பிரிக்காவின் தொடர் தோல்வி.
அனுபவ வீரர்கள் இல்லாததே அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
அடுத்து ஒருநாள் தொடர் வருகிற 29-ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பார்ல் நகரில் உள்ள போலாந்த் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது.