Home விளையாட்டு சதத்தில் சதம் அடித்த கிரிக்கெட்டின் கடவுள் – Cricket Rewind

சதத்தில் சதம் அடித்த கிரிக்கெட்டின் கடவுள் – Cricket Rewind

349
0

சச்சின் டெண்டுல்கர் நூறாவது நூறு: வரலாற்றில் இன்று சதத்தில் சதம் அடித்த கிரிக்கெட்டின் கடவுள் – Cricket Rewind | cricket record break | Sports News in Tamil.

நீண்ட நாள் கனவு

சச்சினுக்கு நீண்ட நாள் கனவு, தான் விளையாடும் போது இந்திய அணி உலக கோப்பை வாங்கிட வேண்டும் என்பதே.

1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வாங்கியது பிறகு உலக கோப்பையை தொட்டுக்கூட பார்த்ததில்லை.

2011 உலககோப்பை

இந்திய அணிக்கு தோனி தலைமை ஏற்று அதில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 2011 ஆம் ஆண்டு தன் கனவான உலகக்கோப்பையை தொட்டு உச்சி முகர்ந்தார்.

அந்த காலகட்டத்தில் சச்சின் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. சரியாக விளையாடவில்லை, அதிக பந்துகளை வீணடிக்கிறார்.

காயம் காரணமாக பல முறை அணியில் இருந்து விலகுகிறார். அவரை ஓய்வு பெறவேண்டும் என்று பிசிசிஐ கட்டாயப்படுத்தியது. இதை பலமுறை சச்சின் கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை

ஆனால் இதையெல்லாம் காதில் வாங்காமல் 2012-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் அணியில் இடம் பெற்றிருந்தார்.

2012-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி அதாவது 8 வருடத்திற்கு முன்பு இதே நாளில் டாக்காவில் நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் எதிர்கொண்டது.

வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினார்கள்.

சச்சின் நூறுக்கு நூறு

5-வது ஓவரில் கம்பீர் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி சச்சினுடன் கூட்டணி அமைத்தார்.

இந்த இணை 30 ஓவர்கள் பேட்டிங் செய்து 148 ரன்கள் குவித்தது. விராத் கோலி 66 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதற்குமேல் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த தொடரை விட்டால் நூறாவது சதத்தை பூர்த்தி செய்ய முடியாது.

வங்கதேசத்துக்கு எதிரான இந்த போட்டியில் அதிக பந்துகளை எடுத்துக்கொண்டார் சச்சின் டெண்டுல்கர்.

அடுத்து களமிறங்கிய ரெய்னாவுடன் கூட்டணி அமைத்து விளையாடிய சச்சின் டெண்டுல்கர், 138 பந்துகளில் தனது 49-வது ஒருநாள் சதம் எடுத்து சர்வதேச அனைத்து விதமான போட்டிகளிலும் நூறாவது சதத்தை பூர்த்தி செய்து யாரும் அசைக்க முடியாத சாதனையை உருவாக்கினார்.

சச்சின் டெண்டுல்கர் சதம் எடுத்தவுடன் வழக்கம்போல பேட்டை தூக்கியும் முகம் வானம் பார்த்து தனது ஸ்டைலில் கொண்டாடினார். உலகமே அவரை கொண்டாடியது.

இதுவரை முதல்தர போட்டிகளில் மட்டுமே 100 சதங்கள் அடிக்கப்பட்டு இருந்தது சர்வதேச போட்டிகளில் 100 சதம் அடித்த முதல் வீரர் மற்றும் இன்று வரை ஒரே ஒரு வீரர் ஆவார்.

பல சதங்கள் சச்சின் டெண்டுல்கர் அடித்து இருந்தாலும் இந்த சதம் ஆமை வேக சதம் ஆகவே அமைந்தது.

வங்கதேசத்துக்கு சாதகம்

ரெய்னாவும் சச்சின் சேர்ந்து 80 ரன்களுக்கு மேல் எடுத்தனர். 47-வது ஓவரில் ரெய்னா ஆட்டமிழக்க அடுத்த பந்தில் சச்சின் டெண்டுல்கரும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். அந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார்.

சச்சின் டெண்டுல்கர் 100-வது சதத்தை எடுத்து இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால் போட்டியின் முடிவு இந்தியாவிற்கு சோகமாகவே முடிந்தது.

வங்கதேசம் 49.2 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 293 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை ஷகிப் அல் ஹசன் தட்டிச் சென்றார்.

பலரும் சச்சின் டெண்டுல்கர் சுயநலமுடன் ஆடுகிறார் என்று விமர்சனங்கள் வைத்தார்கள். அதற்கு ஏற்ப தனது நூறாவது சதத்தையும் விளையாடினார் சச்சின் டெண்டுல்கர்.

மற்ற சதங்கள் அனைத்தும் அணிக்காக இருந்தாலும் 100-வது சதம் சச்சினுக்காகவே இருந்தது. ஆட்டத்தின் முடிவும் அப்படியே அமைந்தது.

என்றோ சச்சின் நூறாவது சதத்தை (cricket record break) பூர்த்தி செய்திருக்க வேண்டும். காரணம், 90 – 99 ரன்களுக்குள் அதிக முறை விக்கெட்டை இழந்த வீரர் சச்சின் டெண்டுல்கர்.

Previous articleசர்ச்சையின் சங்கம் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை நீக்கியது பிசிசிஐ
Next articleபாறைக்கு அடியில் 4000 ஆண்டுகள் பழமையான நடன ஓவியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here