Home விளையாட்டு 73 ஆண்டுகால வரலாற்றை உடைத்தது சௌராஷ்டிரா

73 ஆண்டுகால வரலாற்றை உடைத்தது சௌராஷ்டிரா

255
0

ரஞ்சி போட்டி

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தொடங்கிய 2019 – 2020ம் ஆண்டுக்கான ரஞ்சிப் போட்டியில் சௌராஷ்டிரா கோப்பையை வென்றது.

இந்த வருடம் 38 அணிகள் பங்கு பெற்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதி போட்டிகள் பெங்கால் மற்றும் கர்நாடகாவும், இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் சௌராஷ்டிரா மற்றும் குஜராத் அணிகள் மோதின.

முதல் போட்டியில் பெங்கால் அணியும் இரண்டாவது போட்டியில் சௌராஷ்டிரா அணியும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறின.

பெங்கால் மற்றும் சௌராஷ்டிரா

ராஜ்கோட் மைதானத்தில் மார்ச் 9 தேதி தொடங்கிய இறுதி போட்டியில் சௌராஷ்டிரா கேப்டன் உனன்கட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் ஆடிய சௌராஷ்டிரா அணி 172 ஓவர்கள் பேட்டிங் செய்து 425 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

முதல் இன்னிங்சில் சௌராஷ்டிரா அணியில் வாசுவாட 106, புஜாரா 66, ஜடேஜா 33, பரோட் 54, விஸ்வராஜ் ஜடேஜா 54, ஹர்வீக் 38, உனன்கட் 20 ரன்களும் எடுத்தனர்.

பெங்கால் தரப்பில் அக்ஷ் டீப் 4 விக்கெட்டும், அஹமது 3 விக்கெட்டும், முகேஷ் குமார் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

44 ரன்கள் முன்னிலை

426 ரனக்ள் முதல் இன்னிங்சில் எடுத்தாலே பெங்கால் அணி வெற்றி பெறலாம் என இருந்தது, ஆனால் 161 ஓவர்கள் பேட்டிங் செய்து 385 ரன்கள் மட்டுமே எடுத்தது, சேட்டர்ஜி 81, மனோஜ் 35, திவாரி 64, முஜும்தார் 63, சஹா 64, நந்தி 40 ரன்கள் எடுத்தனர்.

சௌராஷ்டிரா தரப்பில் ஜடேஜா 3 விக்கெட், உனன்கட் மற்றும் மான்கட் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

44 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்சை ஆடிய சௌராஷ்டிரா அணி இறுதி நாளில் 31 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பரோட் 39, தேசாய் 21, விஸ்வராஜ் ஜடேஜா 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜாக்சன் 12 ரன்களுடன் களத்தில் நின்றார். பெங்கால் தரப்பில் அஹமது இரண்டு விக்கெட் வீழத்தினார்.

செளராஷ்டிரா வெற்றி

ரஞ்சி கோப்பை பொறுத்தவரை இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுக்கும் அணியே வெற்றி பெறும், அதன்படி பெங்கால் அணியை விட சௌராஷ்டிரா அணி 44 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

இதன் மூலம் 73 ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் முறையாக சௌராஷ்டிரா அணி கோப்பையை வரலாற்று வெற்றியுடன் வென்று  சாதனை படைத்தது.

கடந்த முறை தோல்வி

கடந்த ஆண்டு இறுதி போட்டியில் சௌராஷ்டிரா அணி விதர்பா அணியிடம் கோப்பையை பறிக்கொடுத்தது.
அப்போது பேசிய உனன்கட் அடுத்த ஆண்டு கோப்பையை வெல்வோம் என்றார்.

தான் சொல்லிய படியே கோப்பையை வென்று அணிக்கு பெருமையை தேடி தந்தார்.

கடந்த எட்டு ஆண்டுகளில் நான்கு முறை இறுதிப்போட்டிக்கு நுழைந்த சௌராஷ்டிரா அணியால் தற்போது தான்  கோப்பை கிடைத்திருக்கிறது.

ஆனால் இதற்கு முன்னால் நவநகர் மற்றும் வெஸ்டர்ன் இந்தியா என்ற அணியில் தான் சௌராஷ்டிரா 2 முறை கோப்பை வென்று இருந்தது.

அர்பிட் வாசுவட ஆட்டநாயகன் விருதை  வென்றார்.

ரஞ்சி போட்டி துளிகள்

  • ராகுல் தலால் இந்த ரஞ்சி பேட்டியில் 1340 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தார்.

  • இந்த ரஞ்சி போட்டியில் மூன்று முச்சதம் அடிக்கப்பட்டது. டி. கோலி, சர்பரஸ் கான், மனோஜ் திவாரி எடுத்தனர்.

  • சௌராஷ்டிரா கேப்டன் உனன்கட் 67 விக்கெட் எடுத்து இந்த ரஞ்சி போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் ஆனார். 7 முறை 5 விக்கெட்க்கு மேல் எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here