சவுரவ் கங்குலி; கொரோனா தீவிரத்தை டெஸ்ட் போட்டியுடன் ஒப்பிட்ட கங்குலி. கடினமான சூழலில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போல இருக்கிறது தற்போதைய நிலை.
கொரோனா தற்போது மிக தீவிரமாக பரவி வருவதால் அதை சமாளிக்க உலகமே திணறி வருகிறது. இதை டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன் கையாளும் வித்தையுடன் ஒப்பிட்டார் கங்குலி.
அதாவது ஒரு கடினமான வேகப்பந்து மற்றும் சுழற்பந்து இரண்டுமே எடுக்க கூடிய ஒரு மைதானத்தில் பேட்ஸ்மேன் மிகவும் கவனமாக விளையாடும் நிலை ஏற்படும்.
அப்பொழுது பேட்ஸ்மேன் தன்னுடைய விக்கெட் காத்துக் கொண்டு ரன்களும் அடிக்க வேண்டும் இரண்டுமே முக்கியம். ஓரிரு சிறிய தவருக்கும் இடமிருக்காது.
அதே போலத்தான் கரோனா வைரஸ். அதிடமிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் மிகவும் கவனமாகவும் பாதுகாப்புடனும் என கங்குலி கூறியுள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் இவரும் ஒருவர். தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவலிக்கும் தருணம் அவருக்கு கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.