இந்தியாவில் இருந்து பாதியிலேயே நாடு திரும்பிய தென் ஆப்பிரிக்கா வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்து உள்ளது.
அமெரிக்காவில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்.
ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் ஒரு நாளைக்கு 500 க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து வருகிறது.
இந்த கொரோனா வைரஸை தடுக்க பல நாட்டு அரசாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இந்தியாவின் பிரதமர் மோடி இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால் மக்கள் யாரும் வெளியில் வராமல் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியில் வந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க அணி 12, 15, 18 தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருந்தது.
முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக தர்மசாலாவில் கைவிடப்பட்டது.
அந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஆரம்பம் ஆனதால் அடுத்த இரண்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் பாதியிலேயே மார்ச் 18 ஆம் தேதி நாடு திரும்பி 14 நாட்கள் அந்த நாட்டில் தனிமைப் படுத்தப் பட்டார்கள்.
அவர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்தார்கள். இதில் 14 நாள் அவர்களை சோதனை செய்ததில் அவர்களுக்கு எந்தவித தொற்றும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அந்த அணியின் மருத்துவர் அதிகாரி டாக்டர்.சோயிப் மஞ்சாரா தெரிவித்துள்ளார்.
இதுவரை தென்னாப்பிரிக்காவில் 1400 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதுவரை 5 பேர் இறந்துள்ளனர்.