ஸ்டீவென் ஸ்மித்; இந்திய மண்ணில் இந்தியாவை தோற்கடிக்க எனக்கு ஆசை, கடைசியாக ஆஸ்திரேலியா இந்தியா விளையாடிய டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என வென்றுள்ளது.
ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா அபாரமாக டெஸ்ட் விளையாடி வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைபற்றியது.
என்னதான் இந்தியா சிறப்பாக விளையாடினாலும் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய மூத்த வீரர்கள் இல்லாததால் தான் இந்தியா வென்றது என பலரும் கூறி வருகின்றனர்.
தடைகாலம் முடிந்து ஆஷஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பதே எனக்கு ஆசை என கூறியுள்ளார்.
மேலும் அவர் உலகக்கோப்பை மற்றும் ஆஷஸ் போட்டிக்குபிறகு டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவை தோற்கடிப்பதே என் நோக்கம் என தெரிவித்துள்ளார்.