மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் (women world cup 2021) போட்டி 50 ஓவர்கள் போட்டி 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அந்த போட்டியின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
நியூசிலாந்தில் வருகிற 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கும் உலககோப்பை மார்ச் 7 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறுகிறது.
முதல் அரையிறுதி மார்ச் 3 ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதி 4 ஆம் தேதியும் நடைபெறுகிறது, அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதி போட்டி மழை காரணமாக தடைப்பட்டால், ‘ரிஸியும் டே என்று அழைக்கப்படும்’ அடுத்த நாள் போட்டி நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
எட்டு அணிகள் கலந்து கொள்ளும் மகளிர் உலககோப்பை போட்டியில், எட்டு அணிகளும் மற்ற ஏழு அணிகளுடன் மோத வேண்டும்.
புள்ளிபட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். முதல் அரையிறுதியில் புள்ளிபட்டியலில் தகுதி பெறும் (1 மற்றும் 4) இடங்களை அணிகள் மோதும்.
இரண்டாவது அரையிறுதியில் தகுதி பெறும் (2 மற்றும் 3) அணிகள் மோதும்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணி தகுதிபெற்றது.
மீதமுள்ள நான்கு அணிகள் தகுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றது.
கடந்த வாரம் நடைபெற்ற டி20 மகளிர் உலககோப்பை போட்டி இறுதியில் இந்தியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா அணி.
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து, ஹமில்டன், வெல்லிங்டன், கிரிஸ்ட் சர்ச், டோவ்ரங்க மற்றும் டுனேடின் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.
இறுதிப்போட்டி கிரிஸ்ட் சர்ச் மைதானத்தில் நடைபெறுகிறது.