Home நிகழ்வுகள் ரஜினி-அஜித்: தோனிக்கு ஈடுகொடுக்க முடியுமா?

ரஜினி-அஜித்: தோனிக்கு ஈடுகொடுக்க முடியுமா?

653
0
ரஜினி-அஜித்

ரஜினி-அஜித்: தோனிக்கு ஈடுகொடுக்க முடியுமா?

தல இந்த சொல்லுக்கு உரியவர் அஜித். அது சினிமாவில் மட்டும் தான். உலக அளவில் தலையாக மாறியவர் தோனி.

விஜய் ரசிகராக இருந்தாலும், அஜித் ரசிகராக இருந்தாலும் முகம் கோணாமல், மனதார தல எனக் கூப்பிடும் நபர் தோனி.

தோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில், அரைச்சதத்துடன் ஒரு சிக்சர் அடித்து போட்டியை நிறைவு செய்தார்.

இதைச் சிறப்பிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

வீடியோவை பார்த்தவுடன் ஒரு நிமிடம் மெய்சிலிர்த்துவிட்டது. சூப்பர் ஸ்டாருக்கு நிகர் சூப்பர் ஸ்டார் என்பதையே ஒரு நிமிடம் உரசிப் பார்த்துவிட்டார் தோனி.

‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ பேட்டையில் ரஜினி என்ட்ரி கொடுப்பதுபோல், வீடியோவில் தோன்றியுள்ளார் தோனி.

அப்படியே பேட்ட படத்தின் ட்ரைலரை உல்டாவாக மாற்றியுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினி ஆஸ்தான லோகோ, ‘கேப்டன் கூல் தோனி’ என மாறியுள்ளது.

அடுத்து தல என்ற வார்த்தை பின்னணியில் இருக்க தூக்கி அடிக்கின்றார் பந்தை. ரஜினியும், அஜித்தும் ஒன்றாக ஓருடலானால் எப்படி இருக்கும்!

அப்படி இருந்தது! தோனியின் தோற்றம். வீடியோ மாஸ் வைரலாகி வருகின்றது. வீடியோவைப் பார்த்தால் நமக்கே நாடி நரம்புகள் முறுக்கேறுகின்றது.

வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பார்க்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here