Home நிகழ்வுகள் இந்தியா அசாமில் கொரோனா நோயாளி உயிரிழந்ததால் மருத்துவர் மீது கொடூர தாக்குதல்! 24 பேரை கைது செய்தது...

அசாமில் கொரோனா நோயாளி உயிரிழந்ததால் மருத்துவர் மீது கொடூர தாக்குதல்! 24 பேரை கைது செய்தது போலீஸ்!

459
0
Assam_Doctor_Assaulted_MrPuyal

கொரோனா நோயாளி ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கியதாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அசாமின் ஹோஜாய் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.

கொரோனா நோயாளி இறந்த பின்னர் இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது.

உதலி கொரோனா பராமரிப்பு மையத்தில் பணியாற்றி வந்த டாக்டர் சியூஜ் குமார் சேனாபதி மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர்களை தண்டிக்க, குறுகிய காலத்தில் இந்த வழக்கில் வலுவான குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து, அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில், “இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட இருபத்தி நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும். இந்த விசாரணையை நான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். நீதி கிடைக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்.” எனக் கூறினார்.

இதே போல் போலீஸ் தரப்பில், பாஸ்கர் ஜோதி மகாந்தா, மருத்துவர்கள் முன்னணியில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதால் அவர்கள் இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் சேனாபதி மீதான தாக்குதல் அனைத்து முன்னணி தொழிலாளர்களையும் தாக்குவது போன்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் வீடியோவில் காணப்பட்ட ஒரு பெண் உட்பட முக்கிய குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மற்றும் சதிகாரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு டிஜிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஞானேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார்.

“மிகக் குறுகிய காலத்தில் நாங்கள் ஒரு வலுவான குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்போம். குற்றவாளிகள் நீதிக்கு முன்பு கொண்டு வரப்படுவதை உறுதி செய்வோம்” என்று அவர் ட்விட்டரில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here