Home Latest News Tamil 18 பந்து 50 ரன்கள்: மும்பையைக் கிழித்து தொங்கவிட்ட ரிஷப் பண்ட்

18 பந்து 50 ரன்கள்: மும்பையைக் கிழித்து தொங்கவிட்ட ரிஷப் பண்ட்

496
0
ரிஷப் பண்ட்

18 பந்து 50 ரன்கள்: மும்பையைக் கிழித்து தொங்கவிட்ட ரிஷப் பண்ட்

மந்தமான அணி என ஐபிஎல் போட்டியில் பெயரெடுத்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி, டெல்லி கேபிட்டல் என்று பெயரை மாற்றிக் களம் இறங்கியது.

முதல் போட்டியே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பில்டிங் தேர்வு செய்தார். பிரித்வி ஷா 7, ஷ்ரேயஸ் அய்யர் 16, ஐங்கிராம் 47,  ஷிகர் தவான் 43 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களம் இறங்கிய ரிஷப்பண்ட் மும்பை இந்தியன்ஸ் பவுலர்களை கிழித்து தொங்கவிட்டார்.

போர், சிக்சர் என விளாசி 18 பந்திலேயே அரைச் சதத்தை கடந்தார். ஐபிஎல் போட்டியில் விரைவாக 50 ரன்கள் அடித்த தோனியின் சாதனையை முறியடித்தார்.

ரிஷப் பண்ட் அடித்த இந்த அதிரடி ரன்களே மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தது.

டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 213 ரன்களைக் குவித்தது. கடினமான வெற்றி இலக்குடன் களம் இறங்கியது மும்பை.

மும்பை இந்தியன்ஸ் அணி, 19.2 ஓவரில் 176 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மும்பை அணியில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக 53 ரன்கள் எடுத்தார்.

பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு டெல்லி அணியின் ரன் ரேட்டை குறைத்திருந்தால் மும்பை அணி வெற்றிபெற்று இருக்க வாய்ப்புகள் உண்டு.

மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் தோற்பது வாடிக்கையான நிகழ்வாக மாறிப்போனது.

82 off 30! DC Whack MI at the Death

 

முழுமையான ஐபிஎல் ஸ்கோர் விவரங்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here