இன்றைய கூகிள் டூடுல்: சர்வதேச பெண்கள் தினம்
இன்று கூகிள் டூடில் (Google Doodle) சாதனை புரிந்த பெண் முன்னோடிகளின் பொன் மொழிகளை வைத்து 11 மொழிகளில் கட்டம் கட்டமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.
உலகில் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழி தெரிந்த பெண் வழிகாட்டிகளை எடுத்துக்கொண்டனர். இதில் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் முதல் ஜப்பான் எழுத்தாளர் யோகோ ஒன் வரை அடங்கும்.
அவர்களின் சொற்களையும் கருத்துக்களையும் 11 கட்டமாக 11 மொழிகளில் டிசைன் செய்யப்பட்டு காட்சி செய்யப்பட்டுள்ளது. நீங்கள் கூகிள் டூடில் இருக்கும் இமேஜை கிளிக் செய்தல் ஒவ்வொன்றாக 13 நபரின் பொன்மொழிகள் வரும்.
முதல் இரண்டு இடங்களில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மே ஜெமிசன், மேக்ஸிகன் கலைஞர் பிரைடா காலோ ஆகியோர் உள்ளனர்.
இதில் 11 மொழிகளில் இந்தியாவின் ஹிந்தி, பெங்காலி மொழிகள் அடங்கும், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய தூதர் பெனோ ஜிபின் ஆகியோர் கருத்துகள் இடம் பெற்றுள்ளனர்.
சர்வதேச பெண்கள் தினத்தின் வரலாறு
1909-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் முறையாக பெண்கள் தினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. இதற்கு காரணம் 1908-ஆம் ஆண்டு பெண் தொழிற்சாலையில் நடந்த விபத்தில் 150 பெண்கள் உயிரிழந்தனர்.
பெண்களின் பாதுகாப்பு கோரி பேரணி நடத்தினர். இதுவே பெண்கள் தினம் கொண்டாடுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
1917-ஆம் ஆண்டு சோவியத் ரஸ்சியாவின் பெண்கள் ஓட்டுரிமை பெற்றதும் மார்ச் 8-ஆம் தேதி முதல் முறையாக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
யுனைடெட் நேஷன்ஸ்(UN) 1975-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.