Home Latest News Tamil முதல் ஒரு நாள் போட்டி இந்தியா வெற்றி: தோனி, கேதார் அரைசதம்

முதல் ஒரு நாள் போட்டி இந்தியா வெற்றி: தோனி, கேதார் அரைசதம்

356
0
முதல் ஒரு நாள் போட்டி

முதல் ஒரு நாள் போட்டி இந்தியா வெற்றி: தோனி, கேதார் அரைசதம்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டி-20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றியது. ஒரு நாள் போட்டி ஐதராபாத் மைதானத்தில் இன்று நடந்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி மந்தமான தொடக்கத்தையே கொடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் கவாஜா 50 ரன்களும் மேக்ஸ்வெல் 40 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் சமி, குல்தீப் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின் ஆடிய இந்தியா அணி 0 ரன்னில் தவான் ஆட்டமிழந்தார். கோலி மற்றும் ரோஹித் நிலைத்து ஆடினார். 80 ரன் இருக்கும் பொழுது கோலி ஆட்டமிழக்க, வரிசையாக ரோஹித்தும், ராயுடும் கிளம்பினர்.

பிறகு தோனி மற்றும் கேதார் நிலைத்து ஆடி பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தனர். இருவரும் அரைசதம் கடந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here