பிசிசிஐ கோபம்: கவுஹாத்தி மைதானத்தில் இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த T20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
மழை குறுக்கீடு
கவுஹாத்தியில் இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான முதலாவது T20 போட்டி நேற்று நடைபெற்றது.
போட்டி துவங்கும் முன்பே மழை பெய்யத் துவங்கிவிட்டது. இதனால் போட்டி நடைபெறவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு மணி நேரம் கழித்து மழை ஓய்ந்தது.
மழை நின்றவுடன் மைதானத்தை ஆய்வு செய்தபோது நடுவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் மழை நீர் ஆடுகளத்திற்குள் புகுந்து பிட்சின் தரத்தை குறைத்துவிட்டது.
அயன் பாக்ஸ் காமெடி
மைதான நிர்வாகிகள் கவனக்குறைவால் மைதானம் ஈரமாகிவிட்டது. இது ஒருபுறம் இருந்தால் அதை சரி செய்கிறேன் என்று நம்ம ஊர் விஞ்ஞானி ராஜூபாயை விஞ்சிவிட்டனர்.
அயன்பாக்ஸ் எடுத்து வந்து மைதானத்திற்கு சூடுவைத்து காயவைக்க முயன்றனர். மேலும் ஹேர் டிரையர் கொண்டும் மைதானத்தை உலர்தினர். இவர்களின் அறிவைக் கண்டு நாடே வியந்துவிட்டது.
போட்டி ரத்து
இறுதிவரை மைதானத்தை காயவைக்க முடியவில்லை. இதனால் போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.
மைதானம் ஈரம் ஆகும் அளவிற்கு பெரிய மழை ஒன்றும் பெய்யவில்லை. இருப்பினும் ஊழியர்களின் அலட்சியத்தால் போட்டி ரத்தானது.
பிசிசிஐ கோபம்
மைதானத்தை மூட பயன்படுத்திய தார்பாய்களில் ஓட்டை இருந்து இருக்கலாம் அதன் காரணமாகவே மைதானதிற்குள் மழை நீர் புகுந்து உள்ளது என பிசிசிஐ கருதுகின்றது.
மைதானம் சேதமடைந்தது குறித்து பிசிசிஐ அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மைதான நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.
IPL T20 போட்டிகள் நடைபெறுமா?
ராஜஸ்தான் ராயஸ் அணி கவுஹாத்தியில் தங்களுடைய சொந்த மைதான போட்டிகளை நடத்த முடிவு செய்து இருந்தது.
இந்நிலையில் மைதானம் ஒழுங்காக பராமரிக்கப்படவில்லை என்பதால் இனி சில வருடங்கள் அங்கு இண்டர்நேசனல் போட்டிகள், டி20 போட்டிகள் நடைபெறாது என்று கூறப்படுகிறது.
கவுஹாத்தி மைதானத்தை அசாம் மாநில கிரிக்கெட் அமைப்பு நிர்வாகிகள் தான் நிர்வகித்தனர். அவர்களின் அலட்சியப்போக்கு காரணமாகவே போட்டி நடத்தமுடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.