வாரம் 4 நாள் வேலை. ஒரு நாளைக்கு 6 மணி நேரம். மீதம் 3 நாட்கள் விடுமுறை. குடிமக்கள் மீது அக்கறை உள்ள அரசு என்றால் அது சன்னா மரின் அரசு.
பின்லாந்து அரசு
பின்லாந்து நாடு என்றால் சட்டென நினைவுக்கு வருவது கல்வி. இந்த நாட்டில் கல்வி தரமாக வழங்கப்பட்டு வருகிறது.
கல்வியை எப்படி மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என பல நாட்டின் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் பின்லாந்து சென்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
பிரதமர் சன்னா மரின்
34 வயதில் பிரதமராக உருவெடுத்தவர் சன்னா மரின். இவரின் பெற்றோர் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள்.
வாரம் 4 நாள் வேலை. ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் போதும். மீதம் 3 நாட்கள் விடுமுறை என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டவர் இவரே.
ஊழியர்கள் கோபம்
பின்லாந்து குடிமக்கள், அந்நாட்டு ஊழியர்கள் அனைவரும் பிரதமர் சன்னா மரின் அறிவிப்பைக் கண்டு கொண்டாட்டத்தில் உள்ளனர்.
ஆனால் மற்ற நாடுகளில் உள்ளவர்கள் கோபத்தில் உள்ளனர். நம்ம ஊர் அரசு ஏன் இப்படி ஒரு சலுகை வழங்கவில்லை என்று.
ஏன் இந்த விடுமுறை?
ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்வதால் அவர்களால் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட முடிவதில்லை. இதனால் அவர்களுக்குள் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இதைக் குறைக்கவே இந்த விடுமுறை என சன்னா மரின் தெரிவித்துள்ளார். இந்த நேரக் குறைப்பு மூலம் ஊழியர்கள் தங்கள் குடும்பங்களுடன் அதிக நேரம் செலவிட முடியும்.
இதனால் அவர்கள் வேலை நாட்களின்போது, வேலையில் அதிக கவனம் செலுத்துவர். நிறுவனங்களுக்குச் சற்று இழப்பீடு ஏற்பட்டாலும், இன்னும் அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.
இந்திய நாட்டிற்கு இது ஒத்து வருமா?
இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதேநேரம் வேலைவாய்ப்புகள் குறைந்து கொண்டே செல்கிறது.
பின்லாந்து போன்று இந்தியாவில் வேலை நாட்கள், நேரம் குறைக்கப்பட்டால் அந்த இடத்தை நிரப்ப கூடுதலாக வேலையாட்கள் நியமிக்கப்பட வேண்டும்.
எனவே, இந்தியா போன்ற நாடுகளில் இதைச் செய்தால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவு சமாளிக்க முடியும்.
நம் நாட்டுத் தலைவர்கள், பின்லாந்து போன்ற நாடுகளுக்கு விசிட் மட்டும் அடிக்கின்றனர். ஆனால் திட்டங்களை வகுப்பதில் கோட்டை விட்டு விடுகின்றனர்.
அப்படியே ஒரு சில நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், ஊழல் அதிகாரிகளால் சரிவர நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.
தொண்டர்கள் குத்தாட்டம்
இதைப் பற்றி எல்லாம் கட்சித் தொண்டர்கள் எந்தக் கவலையும் படுவதில்லை. அவர்களுடைய கட்சி ஜெயித்தால் மீடியா முன்பு குத்தாட்டம் போடுவார்கள்.
தோற்றவர்கள் ஜெயிக்கும் நாளுக்காக காத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் கட்சி ஆட்சியில் இருக்கும் ஐந்து வருடமும் எந்த ஒரு கேள்வியும் கேட்க மாட்டார்கள்.
தேர்தல் நேரம் என்றால் எங்கள் கட்சித் தலைவர் ‘இப்படி அப்படி’ என வாட்ஸ்ஆப்பில் புரளிகளை சேர் செய்து பெருமைப்பட்டு கொள்வார்கள்.
இவர்கள் தான் இந்தியா. இவர்கள் தேர்ந்தெடுப்பவர்கள் தான் இந்திய அரசு. அதில் சேர்ந்து பாதிக்கப்படுவது சக மக்களும் தான்.
ஒரு நல்ல அரசு கிடைத்துவிடாதா எனக் கனவில் மிதக்கும் சக இந்தியக் குடிமக்களும் இவர்களைப் போன்ற தொண்டர்களால் ஒரு நல்ல கட்சியைத் தேர்ந்தெடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.