தேனியில் சாலைமறியல் செய்த தொழிற்சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அகில இந்திய வேலை நிறுத்தம்
இன்று இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பாக வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் ஆயிரக்காணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
தேனி தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் கம்பம் – மதுரை, கம்பம் – திண்டுக்கல் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் நேரு சிலை உள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்டோர் தேனி பூதிப்புரம் பஸ் நிலையத்தில் தொழிற்சங்கங்களின் கட்சிக் கொடிகளுடன் ஒன்று கூடி நேரு சிலையை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
தடுத்து நிறுத்திய காவல்துறையினர்
பூதிப்புரம் பஸ் நிறுத்தத்திலிருந்து நேரு சிலையை நோக்கி கோசங்கள் எழுப்பியவாறு வந்த தொழிற்சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தினார்.
தர்ணாவில் ஈடுபட்ட நிர்வாகிகள்
போராட்டம் நடத்திய தொழிற்சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியவுடன், சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனார்.
கோரிக்கைகள்:
தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தி தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்காமல் தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு துணைபோகக் கூடாது.
பொதுமக்கள் பெரிதும் பயன்பெறும் அரசு போக்குவரத்து துறையினை தனியாருக்கு வழங்கிடக் கூடாது. பிரதமர் சுரக்ஷா யோஜனா என்ற பெயரில் போலியான பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும்.
தொழிலாளர்கள் நலவாரிய சங்கத்தின் முதலீடுகளை பெருக்கித் தர வேண்டும். முதலீடு செய்ய வருபவர்களை அலைக்கழிக்க கூடாது.
முறைசாரா தொழிலாளர்கள் பென்சன் ஆயிரத்தில் இருந்து மூவாயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். முறைசாரா நல வாரியமான எங்களுக்கு முழுமையான நிதியை ஒதுக்கீடு செய்யவேண்டும்.
வேலையின்மை, வேலை இழப்பு வருமான சரிவு விவசாயிகள் தற்கொலை போன்ற செயல்கள் நடைபெறுவதைத் தடுத்து, அதற்குண்டான வழிமுறைகளை கையாள வேண்டும்.
கட்டுமான தொழிலாளர் பாதிப்பு போன்றவற்றிலிருந்து மீட்டு எடுக்கவும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து 100க்கும் மேற்பட்டோர் நேருசிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தனர்.
கைது நடவடிக்கை
தேனியில் சாலைமறியல் செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த போராட்டத்தினால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளயினர்.
இந்தப் போராட்டத்தில் AIUTUC, AITU, CITU, LPF, INTUC ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.