Home ஆட்டோமொபைல் கடும் விற்பனை வீழ்ச்சி: ஆடி இனி இந்தியாவில் இருக்குமா?

கடும் விற்பனை வீழ்ச்சி: ஆடி இனி இந்தியாவில் இருக்குமா?

282
0
கடும் விற்பனை வீழ்ச்சி ஆடி சொகுசுக்கார் பிஎம்டபிள்யூ மெர்சிடிஸ் பென்ஸ்

கடும் விற்பனை வீழ்ச்சி: ஆடி இனி இந்தியாவில் இருக்குமா? பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவற்றைக் காட்டிலும் ஆடி சொகுசுக்கார் விற்பனை குறைவு.

சொகுசுக்கார்

சொகுசுக்கார் என்ற உடனே நாம் நினைவுக்கு வருவது ஆடி கார். சாதாரண நபராக உள்ளவர் பிரபலமானவுடன் முதலில் வாங்கும் கார் ஆடி.

ஆடியில் சென்று மினுக்கினால் மட்டுமே பெரிய இடத்து ஆள் என உலகிற்கு தெரியும் என்னும் அளவிற்கு ஆடி புகழ் இந்தியாவில் இன்றும் உள்ளது.

ஆடி கடும் விற்பனை வீழ்ச்சி

அப்படிபட்ட ஆடி நிறுவனமே இந்தியாவை விட்டு ஓடிவிடும் அளவிற்கு அதன் விற்பனை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

கடந்த ஆண்டில் கார் விற்பனை  கடும் சரிவை சந்தித்து வருகிறது. அதேநேரம் ஆடி தன்னுடைய போட்டி நிறுவனங்களான பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகியவற்றைக் காட்டிலும் மிகக்குறைவான விற்பனையே செய்துள்ளது.

ஒன்மேன் ஆர்மி ஆடி

எத்தனையோ கார் நிறுவனங்கள் இந்தியாவில் தாக்குப்பிடிக்க முடியாமல் வேறு ஒரு நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது.

அதிலும் ஒருசில நிறுவனங்கள் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடியும் உள்ளது.

இப்படி ஒரு நிலையில் எத்தனையோ தடுமாற்றம் வந்தாலும் ஆடி இன்னும் ஒன்மேன் ஆர்மியாக கெத்தாக சந்தையில் நிற்கின்றது.

ஆடி இந்தியாவை விட்டு வெளியேறுமா?

வீழ்ச்சி என்பது ஆடி நிறுவனத்திற்கு புதிதல்ல. கடந்த 2019-ல் ஆடி கார் ஒட்டுமொத்தமாக 4594 யூனிட் விற்பனையானது.

2018-ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்தால் 1869 யூனிட்டுகள் குறைவாகவே விற்பனையாகியுள்ளது.

ஆடி நிறுவனம் பெரிய அளவில் இந்திய சந்தைக்கு மதிப்பு கொடுப்பதில்லை. புதுப்பிக்கப்பட்ட ஏ4 கார்கள், புதியதாக ஏ6 கார்களை மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்தது.

புதிய தலைமுறை சி8, ஏ6 மாடல்களை மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட பின்பே இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதுபோன்ற காரணங்களும் ஆடியின் வீழ்ச்சியில் பங்கு வகிக்கிறது.

பிஎம்டபிள்யூ, பென்ஸ் முன்னிலை

லக்ஸரி கார் விற்பனையில் பென்ஸ் நிறுவனம் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மொத்த விற்பனை 13786 யூனிட்டுகள்.

பிஎம்டபிள்யூ நிறுவனம் 9000 யூனிட் கார்களை விற்பனை செய்து உள்ளது. அதிக விற்பனை என்றாலும் கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டால் சற்று சரிவையே சந்தித்துள்ளது.

ஆனால் ஆடி நிறுவனம் அளவிற்கு கடும் சரிவை சந்தித்தது இல்லை. ஆடியும் இந்திய சந்தைக்கு என சில பிரத்யேக கார்களை அறிமுகம் செய்தால் ஓரளவு தாக்குப்பிடிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here