Home சினிமா இந்திய சினிமா செல்வராகவன் பிறந்தநாள் இன்று

செல்வராகவன் பிறந்தநாள் இன்று

298
0
செல்வராகவன் பிறந்தநாள்

செல்வராகவன் பிறந்தநாள். புதுகோட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்கள் மூலம் இன்றும் நீங்க நினைவுகளுடன் ரசிகர்கள் மனதில் நிற்கும் இயக்குனர் செல்வராகவன்

செல்வராகவன் பிறந்தநாள் இன்று

மார்ச் 5ம் தேதி 1977 ஆம் ஆண்டு தேனியில் பிறந்தவர் தான் இயக்குனர். செல்வராகவன் இவரின் தந்தை பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜா அவர்கள் ஆவார்.

இவருடைய சகோதரர் பிரபல நடிகர் தனுஷ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் திரைக்கதாசிரியர் மற்றும் இயக்குனர் ஆவார்.

இவர் தமிழில் முக்கியமான இயக்குனர்களில் இவரும் ஒருவர். இவர் முதன் முதலில் அவரது தந்தை இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானார்.

இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பின்பு 2003-ஆம் ஆண்டு தனது சகோதரர் தனுஷை வைத்து காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

அந்த படம்தான் தனுஷ் என்று நல்ல மார்க்கெட்டை உருவாக்கியது. திரைப்பட இசையிலும் யுவன் சங்கர் ராஜாவுக்கு தனி பாணியை உருவாக்கி தந்த படம்.

இந்தப் படம் விமர்சனம் ரீதியாக மட்டுமில்லாமல் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பின்பு நடிகர் ரவிகிருஷ்ணா வைத்து 2004 ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தை இயக்கினார்.

இந்தப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் தெலுங்கிலும் 7-ஜி பிருந்தாவனம் காலனி என்று ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு வெளியானது. மேலும் அதிக மொழிகளில் இந்த படம் ரீமேக் ஆனது.

புதுப்பேட்டை கேங்ஸ்டர் படம்

அடுத்து 2006-ஆம் ஆண்டு இவர் இயக்கிய படம் தனுஷ், செல்வராகவன், யுவன்சங்கர்ராஜா மூவரின் திரைப்பட வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது.

கேங்ஸ்டர் பட உலகில் தனக்கென ஒரு சிறப்பு அந்தஸ்தை பிடித்தது இந்த படம். வடசென்னையை பிரதான களமாக கொண்டு இயக்கப்பட்ட புதுப்பேட்டை திரைப்படமானது.

இன்றும் கேங்ஸ்டர் படங்களுக்கு இது ஒரு முன்னோடி தான். குப்பத்தில் வாழும் ஒரு பள்ளி மாணவன் எப்படி ரவுடி ஆகிறான்.

பின்பு அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டு கோலாச்சிக்கிறான் என்று விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லப்பட்டது.

படத்தின் பாடல்களும் வழக்கம்போல பெரிதாக அனைவரையும் கவர்ந்தது. செல்வராகவன் தெலுங்கிலும் படம் இயக்கியுள்ளார்.

அந்தப் படம் பின்பு தமிழில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

ஆயிரத்தில் ஒருவன் ஹிஸ்டாரிகல் பேண்டசி

சோழன் பாண்டிய கதைகளில் ஃபேண்டசி புகர்த்தி இயக்கப்பட்ட படம்தான் ஆயிரத்தில் ஒருவன்.

இந்த படமும் நல்ல வரவேற்ப்பை பெற்று, இந்த படத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இன்றளவும் உள்ளனர்.

அதன்பின் 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டு மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் போன்ற படங்களை இயக்கினார். நல்லவர் இந்த இரு படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறவில்லை

அதனால் நீண்ட இடைவெளிக்குப் பின்பு சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கினார்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வர்த்தக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது

தற்போது இவர் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டத்தில் உள்ளார்.

இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தன்னுடைய படங்களுக்கு பாடல் ஆசிரியராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் இன்று தனது 44-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

Previous articleRanji trophy Updates; இறுதி போட்டி குஜராத் – பெங்கால் அணிகள்
Next articleநடிகை பார்வதி திருவொத்து; டைரக்ஷன் படிக்க அமெரிக்கா செல்ல முடிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here