Home சினிமா கோலிவுட் யார் கேட்டாலும் சிரிச்சுக்கிட்டே முத்தம் கொடுக்கும் ஓவியா பர்த்டே டுடே!

யார் கேட்டாலும் சிரிச்சுக்கிட்டே முத்தம் கொடுக்கும் ஓவியா பர்த்டே டுடே!

361
0
Oviya Birthday Today

Oviya; களவானி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஓவியா இன்று தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஓவியா பிறந்தநாள் Happy Birthday Oviya இன்று.

கேரளா மாநிலம் திருச்சூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி பிறந்தவர் நடிகை ஓவியா.

மாடல் மற்றும் நடிகை. தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

Kangaroo என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதன் பிறகு தமிழில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் விமல் உடன் இணைந்து களவானி படத்தில் நடித்தார்.

பள்ளி மாணவியாக நடித்த ஓவியாவிற்கு இந்தப் படம் தமிழில் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. அதோடு, புதுமுக நடிகை போன்று இல்லாமல், அனுபவம் வாய்ந்த நடிகை போன்று தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

அடுத்து மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், முனி காஞ்சனா 3, களவானி 2, 90 எம்.எல். ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, ராஜ பீமா என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது இடையில் ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

கவர்ச்சி மற்றும் நேர்மை குணத்தால் ரசிகர்களின் அன்பைப் பெற்றார். ஓவியா ஆர்மி உருவாகும் அளவிற்கு ரசிகர்களுக்கு உண்மையாக இருந்தார்.

இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு விதவிதமாக ஹேர்ஸ்டைலை மாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரவ்வை சுற்றி சுற்றி வந்து காதலித்தார். ஆரவ்வும், ஓவியா மீது பாசமாகத்தான் இருந்தார். அவரும் காதலித்தார்.

மருத்துவ முத்தம் கூட கொடுத்தார். ஆனால், கடைசியில் அப்படி எதுவும் இல்லை என்று கூறிவிட்டார்.

எப்போதும் ஓவியா ஓவியா என்று கூறும் அளவிற்கு புகழின் உச்சம் பெற்றார். இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

தற்போது ஓவியா பற்றி ரசிகர்கள் இன்னமும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். ஓவியா நடிப்பில் வந்த படங்கள் ஹிட் கொடுக்கவில்லை. அடுத்தடுத்த படங்களின் வெளியீட்டிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், இன்று தனது 29 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று அனைவரும் ஓவியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஓவியா பிறந்தநாளை முன்னிட்டு #HappyBirthdayOviya என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleவிளம்பரம் இல்லாத மக்கள் சேவையில் கேரளா முதல்வர்.
Next articleலாக்டவுன் காரணமாக பெண்கள் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்: வரலட்சுமி சரத்குமார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here