Vadivelu Corona Video; கண்ணீர் விட்டு கதறி அழுத வடிவேலு: வைரலாகும் வீடியோ! கொரோனா வைரஸ் ரொம்ப ஆபத்தா பயங்கரமா இருக்கு. யாரும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் என்று நடிகர் வடிவேலு கண்ணீர் விட்டு கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்து பேசிய வடிவேலு கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
வடிவேலு கண்ணீர் விட்டு கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சிங்கப்பூர், இத்தாலி, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், டோக்கியோ என்று 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம் என்று கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மட்டும் கொரொனா வைரஸ் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தடுப்புக்கு மருந்து இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
எனினும், நோய் பரவாமல் தடுப்பதும், அதிலிருந்து விலகியிருப்பதும் நம் ஒவ்வொருவரது கடமை என்று அரசும், மருத்துவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலுவும் தனக்குரிய பாணியில் கொரோனா குறித்து பேசியுள்ளார். அதில், அவர் கூறுகையில், மன வேதனையுடன் ரொம்ப துக்கத்துடன் சொல்கிறேன்.
தயவு செய்து அனைவரும் அரசு சொல்லும் அறிவுரைப்படி இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டிலேயே இருங்கள்.
மருத்துவ உலகமே மிரண்டு தங்களது உயிரை பணையம் வைத்து எல்லோரது உயிரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு நாம் முழுவதும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதே போன்று காவல் துறை அதிகாரிகளும் நமக்காக பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம் சந்ததிகளுக்காக, நம் வம்சாவளிக்காக, நம் புள்ளகுட்டி உயிரை காப்பாத்துறதுக்காக நாம் எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அழுதுகொண்டே பேசியுள்ளார்.
வடிவேலு கண்ணீர்விட்டு கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளதை அனைவருமே சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.