Home சினிமா கோலிவுட் ரஜினிகாந்தின் வீடியோவை நீக்கியது ட்விட்டர்

ரஜினிகாந்தின் வீடியோவை நீக்கியது ட்விட்டர்

360
0

பிரதமர் மோடி கேட்டுக் கொண்ட மக்கள் சுய ஊரடங்குக்கு ரஜினி ஆதரவு தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை தற்போது ட்விட்டர் பக்கம் நீக்கியுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளுக்கு பரவி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது.

இதை தடுக்க பல நாடுகள் பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இருந்தபோதிலும் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் எளிதாக பாதிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது இடத்திலுள்ள இந்தியா குறைந்த மக்களையே தாக்கியுள்ளது இந்த வைரஸ்.

மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிலும் நம் நாட்டின் பிரதமர் இருக்கும் எல்லா வழிகளிலும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

குறிப்பாக தமிழ் நாடு அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களுக்கு தேவையான நிறைய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

பிரதமர் மோடி பாராட்டும் அளவிற்கு தமிழ்நாடு அரசு மக்களுக்கு கொரோனா வைரஸ் அண்டாமல் தடுப்பதற்கு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது.

நேற்றைய முன்தினம் மோடி நாளை மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் மக்கள் சுய ஊரடங்கு ஏற்படுத்திக்கொள்ளவும் அறிவித்திருந்தார்.

அதன்படி பல நடிகர் நடிகைகள் இதற்கு ஆதரவு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர்.

இன்று நடிகர் கமலஹாசன், ரஜினிகாந்த், மம்முட்டி, தனுஷ், நானி போன்ற நடிகர்கள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதில் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவில் பேசியதாவது : “பிரதமர் மோடி அறிவித்துள்ளபடி நாளை யாரும் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணிவரை வெளி வர வேண்டாம்.

பிரதமர் அவர்களின் சொல்லுக்கு மதிப்பளித்து மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும்.

கொரோனா வைரஸ் 12 லிருந்து 14 மணி நேரம் உயிருடன் இருப்பதால் நாளை நீங்கள் வெளிவராமல் இருந்தால் கொரோனா வைரஸ் இரண்டாவது கட்டத்தை தான்டாமல் அழிந்துவிடும் என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

சமூக வலைதளமான ட்விட்டரில் இது தவறான கருத்து என்றும் எங்களுடைய டிவிட்டர் விதிமுறைக்கு புறம்பானது என்றும் அவருடைய வீடியோவை நீக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் இத்தாலியில் அதிக மக்களை கொத்துக் கொத்தாக கொன்று வருகிறது.

அந்த நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சொன்னது என்னவென்றால் நம்முடைய இருமல், தும்மல் மற்றும் மூக்குச் சளியில் இருந்து ஏற்படும் நீரினால் பல நாட்களுக்கு கொரோனா வைரஸ் உயிர்வாழும் என்றும் கூறியுள்ளார்கள்.

அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லாத 12 லிருந்து 14 மணிநேரம் வைரஸ் உயிர் வாழும் என்று தவறான தகவலை குறிப்பிட்டது.

இந்த வீடியோவை நீக்க இதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது

ஆனால் அவர் எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டு இருந்த சில விஷயங்களை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here