Home சினிமா கோலிவுட் பெண் பத்திரிக்கையாளர் புகைப்படம் சர்ச்சை: மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்!

பெண் பத்திரிக்கையாளர் புகைப்படம் சர்ச்சை: மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்!

339
0
Dulquer Salmaan and Chetna Kapoor

Dulquer Salmaan; பெண் பத்திரிக்கையாளர் புகைப்படம் சர்ச்சை: மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்! அனுமதியின்றி தனது படத்தில் பெண் பத்திரிக்கையாளரின் புகைப்படத்தை இடம்பெறச் செய்த துல்கர் சல்மான் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த சூழலில் புதுப் படங்களின் ரிலீஸ் தள்ளி போயுள்ளது. மேலும், டிஜிட்டல் மீடியாக்கள், புதிய படங்களை வெளியிடுவது குறித்து பேசி வருகின்றன.

Chetna Kapoor

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பு மற்றும் தயாரிப்பில் திரைக்கு வந்த புதிய படம் Varane Avashyamund.

துல்கர் சல்மான் உடன் இணைந்து இந்தப் படத்தில், சுரேஷ் கோபி, ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷன், ஆகியோர் நடித்திருந்தனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக Varane Avashyamund என்ற படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் மும்பையைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவரது புகைப்படம் இடம்பெற்றுள்ளதாகவும், படத்தைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், தனது அனுமதியின்றி இந்தப் புகைப்படத்தை துல்கர் சல்மான் பயன்படுத்தியுள்ளார்.

Reporter Chetna Kapoor

இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால், இது குறித்து நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், புகைப்படம் வெளியானதுக்கான முழுப்பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும், இதற்காக தயாரிப்பு நிறுவனமும், பெண் பத்திரிக்கையாளரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் எப்படி படத்தில் இடம்பெற்றது என்று தெரியவில்லை. இது குறித்து தயாரிப்பு தரப்பிலும், இயக்குநர் தரப்பிலும் விசாரணை நடந்து வருகிறது.

அதோடு, முழுக்க முழுக்க பெண்களை மதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleகேட்காமலேயே அள்ளிக் கொடுத்த ரஜினிகாந்த்: இயக்குநர்கள் சங்கம் பாராட்டு!
Next articleவிஜய்யைப் போன்று அனைத்து நடிகர்களும் உதவ வேண்டும்: முதல்வர் கோரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here