Gypsy Sneak Peek: ஜிப்ஸி படத்தின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது என்பதை ஜிப்ஸி புரோமோ வீடியோ வெளிகாட்டியுள்ளது.
ஜோக்கர் மற்றும் குக்கூ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜூ முருகன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 3-ஆவது படைப்புதான் ஜிப்ஸி.
முழுக்க முழுக்க, ரொமாண்டிக் கலந்த காதல் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக, நடாசா சிங் நடித்துள்ளார். மேலும், சன்னி வெயின், லால் ஜோஸ், சுஷீலா ராமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
வரும் 6-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகியது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டார்.
ஜிப்ஸி டீசர்
இந்த டீசரில், முதலில் எந்த அமைப்பு, மாவோயிஸ்டாக இருக்குமோ என்று குரல் எழும்புகிறது. இதற்கு நான் முதலில் மனிதன் என்று ஜீவாவின் குரல் கேட்கிறது.
அதன் பிறகு உனக்கு என்று ஒரு முகம் படைக்கப்பட்டிருக்கும். அது கூடிய விரைவில் உன் கைக்கு வரும் என்று கூறும் குரல் தான் கேட்கிறது.
Gypsy Teaser: ஜிப்ஸி டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா!
அதன் பிறகு ஹீரோ – ஹீரோயின் சந்திப்பு நிகழ்கிறது. அப்படியே அவர்களது காதல் காட்சிகள் தான் திரை முன்பு வந்து செல்கிறது.
இதையடுத்து, உள்ளே அரசியல் நுழைகிறது. இறுதியில், ஜீவாவின் காதல் ஜெயித்ததா? இல்லையா என்பதே கருவாக இருக்கும் என்று தெரிகிறது.
இடையில், போலீஸ் ஸ்டேசன், அரசியல் பிரவேசம், பிரச்சாரம், வன்முறை என்று கதை நகர்கிறது. ஒரு துப்பாக்கியால் ஒரு குரலை அடக்க நினைத்தால், ஓராயிரம் குரல் வெடிக்கும் என்று ஜீவா வசனம் பேசுகிறார்.
இறுதியில், பாடல் ஒலிக்கிறது. அதோடு டீசரும் முடிகிறது. இந்த டீசரைப் பார்த்தால் ஜாதி, அரசியல், காதல், வன்முறை போன்றவை இடம்பெற்றதாக தான் ஜிப்ஸி படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Gypsy Sneak Peek
இந்த நிலையில், ஜிப்ஸி படத்தின் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தலைவர் சிலையை திறப்பதற்கு துணை முதல்வர் வருகை தருகிறார்.
இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சாலையோரங்களில் யாரும் படுத்து உறங்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதையும் மீறி சாலையோரங்களில் தங்கியவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இவர்கள் யாருக்கும் ஆதார் கார்டு கிடையாது. அதிலும் இந்த குதிரைக்காரன் மாவோயிஸ்டாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கான்ஸ்டபிள் கூறுகிறார்.
இதற்கிடையில், ஜீவாவுடன் கைதான ஒருவர் ஆதார் கார்டெல்லாம் கேட்கமாட்டாங்க, ஏடிஎம் கார்டு இருந்தால் தலைக்கு ரூ.100 மட்டும் போதும் என்கிறார். அவர், பாண்டியன் தியேட்டருக்கு படம் பார்க்க போனேன்.
தேசிய கீதம் பாடும் போது எழுந்திருக்கவில்லை என்று இங்கு ஸ்டேசனுக்கு அழைத்து வந்து ரூ.100 கொடு என்று டார்ச்சர் பண்ணுறாங்க என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசியக் கீதம் ஒலிக்கும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எங்களை எல்லாம் கைது செய்வதற்கு உங்களது உரிமை இல்லை என்று ஜீவா விளக்குகிறார்.
நீதித்துறை vs காவல்துறை
மேலும், நீதித்துறை சொல்வதை காவல்துறை கேட்பதில்லை, காவல்துறை சொல்வதை நீதித்துறை கேட்கமாட்டீங்குது.
மக்கள் சொல்வதை எந்த துறையும் கேட்கமாட்டீங்குது என்றார். இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளேயிருந்து இன்ஸ்பெக்டர் வருகிறார்.
அவரைக் கண்டதும் கிளி திருடன் திருடன் என்று சொல்ல, கோபத்தில் கிளிக்கூண்டை எட்டி உதைக்க, யோவ், எவன் யாரு சிலையை திறந்து வைத்தால் எங்களுக்கு என்னய்யா என்று ஒரு வயதான பெரியவர் கேட்குகிறார். இதனால், ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் அவரை தாக்குகிறார்.
இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத ஜீவா, இன்ஸ்பெக்டர் மீது கையை வைக்கிறார். அப்போது ஆங்கிலத்தில் Very Very Bad என்று கூறுவதோடு அந்த வீடியோ முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த வீடியோ படத்தில் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. ஏனென்றால் இந்த வீடியோ காட்சியை தணிக்கைக் குழுவினர் நீக்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.