Home சினிமா ஹாலிவுட் சினிமா ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட் போஸ்டர் வெளியானது : டி காப்ரியோ &...

ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட் போஸ்டர் வெளியானது : டி காப்ரியோ & பிராட் பிட்

406
0

ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட் போஸ்டர் வெளியானது : டி காப்ரியோ & பிராட் பிட்

லியோனர்டோ டி காப்ரியோ மற்றும் பிராட் பிட் இணைந்து நடிக்கும் ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட்(Once Upon a Time In Hollywood) திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஹிட் பல்ப் பிக்சன் படத்தை இயக்கிய குயிண்டன் டாரண்டியோ இயக்கத்தில் வெளிவரும் இத்திரைப்படம் நிஜக்கதையை தழுவி எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

1969ஆம் ஆண்டு மண்சோன் குடும்பத்தில் நடந்த கொலையை மையக்கதையாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக படக் குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 44 வயதான லியோ மற்றும் 55 வயதான பிராட் இரு கதாப்பாத்திரங்களும் கற்பனையாக அமைத்துள்ளதாகவும் இந்த வருடம் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் அஜீத் மற்றும் விஜய் போல மிகவும் பிரபலமான நடிகர்கள் ஆகும்.

டி காப்ரியோ இன்ஸ்டாக்ரம் பக்கத்தில் வெளியான போஸ்டரில் இருவரும் இளமையாக தெரிவதாக ட்விட்டரில் பல விமர்சனங்களும் எழுந்தன.

போஸ்டரில் ஃபோட்டோஷாப் செய்து இருவரையும் இளமையாகவும் ஒல்லியாகவும் காட்டியுள்ளனர் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

https://twitter.com/jordanjabroni/status/1107710645196279809

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here